Chickpeas: சுண்டல் சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
By Pandeeswari Gurusamy Feb 11, 2024
Hindustan Times Tamil
ஆரோக்கிய உணவைப் பலரும் தேடிக்கொண்டு இருக்கும்போது, சூப்பரான உணவுதான், சுண்டல்.
pixa bay
சுண்டலில் வைட்டமின் பி, செலினியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், நார்ச்சத்து, மெக்னீசியம் ஆகியச் சத்துகள் அதிகளவில் உள்ளன.
pixa bay
சுண்டலை உணவாக எடுத்துக்கொள்ளும்போது கிடைக்கும் நன்மைகள்:
pixa bay
சுண்டலில் ஆந்தோசயனின், பைட்டோநியூட்ரியண்டுகள், ஆண்டி ஆக்சிடண்டுகள் இருப்பதால், ரத்த நாளங்களில் உள்ள கொழுப்புகள் சேர்வது குறையும். எனவே, இது மாரடைப்பினைத் தடுக்கும்.
pixa bay
சுண்டலில் கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய கனிமச்சத்துக்கள் இருப்பதால், உடல் எலும்புகளுக்கு உறுதித்தன்மை கிடைக்கிறது.
pixa bay
கர்ப்பிணிகள், சுண்டலை சாப்பிடுவது நன்மை பயக்கும் செயலாகும். ஏனெனில், சுண்டலில் உள்ள போலிக் அமிலம் கருவளர்ச்சிக்கு உதவக்கூடியது.
pixa bay
சுண்டலில் மெக்னீசியம், பொட்டாசியம் சத்துக்கள் இருக்கிறது. எனவே, இவை உயர் ரத்த அழுத்தத்தை நிறுத்தி, இதயத்தைப் பாதுகாக்கிறது.
pixa bay
சுண்டல், உண்பதால் மார்பக புற்றுநோய்க்கட்டிகள் உண்டாவது மட்டுப்படுகிறது.
pixa bay
இதய ஆரோக்கியத்திற்கு உதவும் உப்பு இல்லாத சிற்றுண்டிகள் குறித்து பார்க்கலாம்