கறி தேவையான பொருட்கள் : கடலை எண்ணெய் - 1 கப், இஞ்சி-பூண்டு விழுது - அரை கப், வெங்காயம் - 5, சீரகப் பொடி - 2 தேக்கரண்டி, சிவப்பு மிளகாய் விழுது - 4 தேக்கரண்டி, மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி, மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, நெய் - 2 தேக்கரண்டி, தண்ணீர் - 2+2 டம்ளர்கள்கள், கொத்தமல்லி - ஒரு கப், பச்சை மிளகாய் - 4, கோழிக்கறி - ஒன்றரை கிலோ, கேப்சிகம் - 4
Pixabay
ஒரு கடாயை எடுத்து அதில் சிக்கன் வறுக்க ஒரு கப் எண்ணெய் ஊற்றவும். ஒரு சிறிய பாத்திரத்தில் நன்றாக பேஸ்ட் செய்து வைத்திருக்கும் இஞ்சி - பூண்டு பேஸ்ட்டை எடுத்து எண்ணெயில் போட்டு வறுக்கவும். அப்படி 2-3 நிமிடங்கள் வறுத்த பிறகு, அதில் வெங்காய பேஸ்ட் சேர்க்கவும்.
Pixabay
இந்த கலவையை 4 முதல் 5 நிமிடங்கள் வறுத்து, பிறகு இரண்டு நிமிடங்கள் மூடி வைக்கவும். அதில் இருந்து எண்ணெய் பிரிந்துவிடும்.
அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் சீரகப் பொடி, அரை கப் கொத்தமல்லி பேஸ்ட் சேர்க்கவும்.
Pixabay
பின்னர் சிவப்பு மிளகாயை நன்றாக அரைத்து, ஒரு கிண்ணத்தில் 4 தேக்கரண்டி கலவையைச் சேர்க்கவும்.
Pixabay
ஒரு கிண்ணத்தில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து, எல்லாவற்றையும் சேர்த்து மூன்று நிமிடங்கள் கிளறவும்.
Pexels
சிறிது நேரம் கழித்து, அதில் 2 தேக்கரண்டி நெய்யைச் சேர்த்தால், அது சுவையாகவும் மணமாகவும் இருக்கும். இப்போது கலவையில் தேவைக்கேற்ப 1-2 கிளாஸ் தண்ணீர் சேர்த்து, நன்கு கலந்து, மூடி வைத்து 8 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
Pixabay
பின்னர் மூடியை அகற்றி, ஒரு கப் சாதாரண தயிர் சேர்த்து கலக்கவும்.
இப்போது ஒரு கப் கொத்தமல்லி மற்றும் நான்கு பச்சை மிளகாய்களை மிக்ஸியில் சேர்த்து மென்மையான பேஸ்ட் தயாரிக்கவும். அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, கலவையில் சுவைக்க போதுமான உப்பு சேர்க்கவும்.
Pexels
அந்த கெட்டியான பேஸ்டுடன் ஒன்றரை கிலோ கோழிக்கறியைச் சேர்த்து, மிதமான தீயில் சமைக்கவும்.
ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, மூடியை அகற்றி, கோழியைத் திருப்பிப் போடவும்.
canva
இப்போது அதில் செங்குத்தாக வெட்டப்பட்ட தக்காளி துண்டுகளைச் சேர்க்கவும். இரண்டு கிளாஸ் தண்ணீரை ஊற்றி, கோழி துண்டுகள் உடையாமல் கவனமாகக் கலந்து, மூடி வைக்கவும்.
canva
கோழி வெந்துவிட்டது என்பதை உறுதிசெய்ததும், கேப்சிகம் துண்டுகளைச் சேர்த்து, மீண்டும் ஒருமுறை கலந்து, மூடி வைக்கவும்.
சுமார் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, கேப்சிகம் துண்டுகள் வெந்தவுடன், கொத்தமல்லி இலைகளைத் தூவி, மூடி வைத்து, அடுப்பை அணைக்கவும்.
canva
அவ்வளவுதான், உங்கள் அன்புக்குரியவர்களுக்கு சூடான கேப்சிகம் சிக்கன் கறியை பரிமாறுங்கள்.. அப்பறம் என்ன பாராட்டு மழைதான் போங்க.
canva
உலர் திராட்சை ஊற வைத்த நீரை குடிப்பதால் கிடைக்கும் அற்புதமான பலன்களை பாருங்க!