சிக்கன் 65 சாப்பிட்டு போரடிக்குதா.. சிக்கன் பக்கோடா செய்து பாருங்க.. செம டேஸ்ட்!
By Pandeeswari Gurusamy May 18, 2025
Hindustan Times Tamil
தேவையான பொருட்கள் : 1 கிலோ கோழிக் கறி (எலும்பு குறைவாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும்). மிளகாய் தூள் ஒரு டீஸ்பூன் சோள மாவு மற்றும் அரிசி பவுடர் இரண்டு டீஸ்பூன் மஞ்சள்தூள் அரை டீஸ்பூன், சுவைக்கு தேவையான அளவு உப்பு, பொறித்து எடுக்க எண்ணெய்
கோழி கறியை சிறிய அளவில் வெட்டி நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
பொறித்து எடுக்க தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் அதன் சுவையே தனி. உங்கள் சுவைக்கு ஏற்ற மாதிரி எண்ணெய் பயன்படுத்தலாம்.
ஒரு அகலமான பாத்திரத்தில் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், அரிசி தூள், சோள மாவு, உப்பு சுத்தம் செய்த கறியையும் போட்டு ஒன்றாக பிரட்டவும். கடைசியாக சிறிய அளவில் தயிர் சேர்த்து பிசைந்து கொண்டால் சுவை இன்னும் கூடும்.
தயார் செய்த கலவையை அரைமணி நேரம் மசால் ஓட்டிப் பிடிக்க வசதியாக விடவும்.
மசாலா நன்றாக பிடித்த பிறகு உங்களுக்கு பிடித்த எண்ணெயில் உதிரி உதிரியாக கலவையை பிரித்துப் போட்டு பொரித்து எடுக்கவும்.
வீடே கமகமக்கும் சுவை மிகுந்த மொறு மொறுப்பான சிக்கன் பக்கோடா ரெடி. பிளேட்டில் தக்காளி சாஸ் வைத்து பரிமாறவும். உங்களுக்கு பாராட்டுக்கள் நிச்சயம்.
காலையில் ஒரு கப் பப்பாளி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?