செவ்வாய் பகவானின் கடக ராசி பயணத்தால் கஷ்டத்தை அனுபவிக்க போகும் ராசிகள்

Canva

By Suriyakumar Jayabalan
May 09, 2025

Hindustan Times
Tamil

நவகிரகங்களின் தளபதியாக விளங்கக்கூடியவர் செவ்வாய் பகவான். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். செவ்வாய் பகவான் கோபத்தின் நாயகனாக விளங்கி வருகின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

Canva

அந்த வகையில் செவ்வாய் பகவான் தற்போது கடக ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஜூன் 7ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். இரண்டு மாதங்கள் செவ்வாய் பகவானின் ஆதிக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. 

Canva

அந்த வகையில் செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் ஒரு சில ராசிகளுக்கு பலவீனமான யோகங்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

Canva

மேஷ ராசி: உங்கள் ராசியில் செவ்வாய் பகவானின் இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சரும நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. கோபத்தை கட்டுப்படுத்திக்கொள்வது நல்லது என கூறப்படுகிறது. 

Canva

கடக ராசி: உங்கள் ராசியில் செவ்வாய் பகவான் நுழைந்திருப்பது மிகப்பெரிய சிக்கல்களை ஏற்படுத்துமான ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அனைத்து காரியங்களிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமெனக் கூறப்படுகிறது. மற்றவர்களிடத்தில் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது என கூறப்படுகிறது. 

Canva

சிம்ம ராசி: செவ்வாய் கடக ராசி பலன் உங்களுக்கு சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்களை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. ஆவணங்களில் கையெழுத்து போடும்பொழுது ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்படுவது நல்லது என கூறப்படுகிறது. 

Canva

பொறுப்பு துறப்பு : இந்த தகவல் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களை அணுகவும்.

Canva

சாப்பிட்ட உடனே செய்யக்கூடாத 5 விஷயங்கள்.. இது உங்களுக்குத் தெரியுமா?