உங்களது உணவு டயட்டில் தினை அரிசி சேர்ப்பதால் கிடைக்கும் உடல் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Apr 21, 2024

Hindustan Times
Tamil

பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றாக இருந்து வரும் தினை அரிசி, ஊட்ச்சத்துக்கள் மிக்கதாக இருந்து வருகிறது. வறண்ட பகுதிகளில் அதிக விளையக்கூடிய உணவு பொருளாக உள்ளது

எடை குறைப்பு, டயபிடிஸை நிர்வகிப்பது, இதய ஆரோக்கியத்தை பாதுக்கபது என பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது தினை அரிசி

குறைவான கிளெசமிக் குறியீடு கொண்ட தினை அரிசி ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது. சர்க்கரை அளவு அதிகரிப்பை தடுப்பதற்கான சிறந்த உணவாக உள்ளது

தினை அரிசியில் இடம்பிடித்திருக்கும் ட்ரிப்டோபான் பசி உணர்வை கட்டுப்படுத்தி, நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை அளித்து எடை குறைப்புக்கு வழிவகுக்கிறது

இரும்பு சத்து, கால்சியம் நிறைந்திருக்கும் தினை அரசி எலும்பு மற்றும் தசை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எலும்புப்புரை, கீல்வாதம், முதுகுவலி போன்றவற்றின் பாதிப்பை குறைக்கிறது

தினை அரசியில் இருக்கும் வைட்டமின் பி1, நரம்பு அமைப்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இதனால் நரம்பியல் கோளாறுகளான அல்சைமர், பார்கின்சன் பாதிப்பின் ஆபத்தை குறைக்கிறது

க்ளுட்டன் ப்ரீ, நிறைவான புரதம், குறைவான் கார்ப்போஹைட்ரேட் ஆகியவை இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது

ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக இருந்து வருவதால் ஸ்டாமினாவை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. தொற்றுகளுக்கு எதிராக போராடி ஒட்டு மொத்த உடல் நலனையும் பேனி பாதுகாக்கிறது 

யாரெல்லாம் பால் மற்றும் பால் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்