நீர்ச்சத்து நிறைந்த செள செள காய்கறியில் இடம்பிடித்திருக்கும் உடல் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Jan 17, 2024

Hindustan Times
Tamil

நீர்ச்சத்து மிக்க காய்கறி குடும்பத்தை சேர்ந்த செள செள ஊட்டச்சத்துகள் களஞ்சியமாக இருந்து வருகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்களை கொண்டிருக்கும் இது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது

ரத்த சர்க்கரை அளவை நிலையாக வைப்பதில் இருந்து இதய ஆரோக்கியம், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவது வரை பல்வேறு நன்மைகள் கொண்டுள்ளது 

செள செள காய்கறியில் இடம்பிடித்திருக்கும் போலேட், வைட்டமின் பி9 போன்ற ஊட்டச்சத்துகள் குறைந்த அளவிலான கலோரி, கார்போஹைட்ரேட், கொழுப்பை கொண்டதாக உள்ளது

வைட்டமின் சி, மைரிசெடின் என்ற ஆன்டிஆக்ஸிடன்டை கொண்டுள்ளது. மைரிசெடின் நோய் பாதிப்புக்கு எதிராக போராடும் பண்புகளை கொண்டுள்ளது

செள செள காய்கறியில் இடம்பிடித்திருக்கும் பல்வேறு சேர்மானங்கள், நார்ச்சத்துகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது

உடலில் ரத்த சர்க்கரை அளவை நிலைப்படுத்து உதவுவதுடன், இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது

செள செள காய்கறியில் இடம்பிடித்திருக்கும் பிளேவனாய்ட்கள், நர்ச்சத்துகள் செரிமான பாதையில் பல்வேறு செயல்பாடுகளை சீராக்கி, குடலில் நல்ல பாக்டீரியா வளர்வதற்கு ஊக்கமளிக்கிறது 

ப்ரீத்தி ஜிந்தா குறித்து சுவாரஸ்ய தகவல்கள்