பீட்ரூட் இலைகளை உங்கள் உணவின் டயட்டில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Apr 11, 2024

Hindustan Times
Tamil

ஊட்டச்சத்துகளின் களஞ்சியமாக பீட்ரூட் இலைகள் இருப்பது பலருக்கும் தெரியாது. இதனால் செரிமான அமைப்பு வலுவடைந்து, இதயம், எலும்பு, கண்கள் ஆரோக்கியம் பேனி பாதுகாக்கப்படுகிறது

பீட்ரூட் இலைகளில் போதிய அளவில் வைட்டமின் சி நிறைந்துள்ளன. இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் காயச்சல், சளி பாதிப்பை தடுக்கிறது

உடலில் உள்ள நைட்ரிக் ஆக்ஸைடு மற்றும் ஆக்ஸிஜன் அளவை மேம்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தத்ததை குறைத்து இதய நோய் பாதிப்பின் அபாயத்தை குறைக்கிறது

பீட்ரூட்டில் இருக்கும் வைட்டமின் ஏ, பீட்டா கரோடீன் கண்களின் பார்வைத்திறனை மேம்படுத்துகிறது. லூட்டீன், வீக்கத்துக்கு எதிரான சேர்மானம் வயது தொடர்பாந மாகுலர் சிதைவு பாதிப்பை குறைக்கிறது

கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் டி மற்றும் வைட்டமின் கே பீட்ரூட் இலைகளில் நிரம்பியுள்ளதால் எலும்புகளை வலுவாக்கிறது

பீட்ரூட் இலைகளில் இடம்பிடித்திருக்கும் வைட்டமின் பி6, நைட்ரேட்கள் மூளையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, அறிவாற்றல் தொடர்பான வீழ்ச்சியை தடுக்கிறது 

கரையக்கூடிய, கரையும் தன்மை இல்லாத நார்ச்சத்துக்கள் பீட்ரூட் இலையில் உள்ளன. இவை குடல் இயக்கத்தை சீராக்கி குடல்களில் ஆரோக்கியமான பாக்டீரியா வளர்ச்சியை மேம்படுத்துகிறது

கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான பேலேட் சத்துக்கள், வைட்டமின் பி9 பீட்ருட் இலைகளில் இருப்பதால் அவை சிசுவின் வளர்ச்சிக்கு உதவுகிறது

பீட்ரூட் இலைகளில் இருக்கும் டயட்ரி நார்ச்சத்துகள் உடல் எடையை நிர்வகிக்க உதவுகிறது

எதிலும் குதிரை போல் செயல்படுவார்கள்! அஸ்வினி நட்சத்திரத்தின் பொது பலன்கள்!