விளக்கு எண்ணெய் என்று பரவலாக அழைக்கப்படும் ஆமணக்கு எண்ணெய் உடல் நலம் தொடர்பாக பல்வேறு நன்மைகளை தரும் எண்ணெய்யாக இருந்து வருகிறது

By Muthu Vinayagam Kosalairaman
Jan 04, 2024

Hindustan Times
Tamil

ஆமணக்கு செடியில் உள்ள விதையில் இருந்த தயார் செய்யப்படும் எண்ணெய்யாக இது உள்ளது. கிழக்கு பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படும் செடியாக இருந்து வரும் ஆமணக்கில் இருந்து கோல்ட் ப்ரசிங் முறையில் எண்ணெய் பிரித்து எடுக்கப்படுகிறது

ஆமணக்கு எண்ணெய்யில் உடல் ஆரோக்கியத்தை பேனி காக்கும் பல்வேறு நன்மைகள் நிறைந்துள்ளன

ஆமணக்கு எண்ணெய் மலச்சிக்கலுக்கான சிறந்த தீர்வாக உள்ளது. இந்த பாதிப்பு உள்ளவர்கள் பிரதாமாக பயன்படுத்தகூடியதாக ஆமணக்கு எண்ணெய் உள்ளது

கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்திருப்பதால் ஈரப்பதமூட்டும் பண்புகள் இயல்பாகவே உள்ளது. எனவே சரும வறட்சியை போக்கி, அதன் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது

பிரசவ காலத்தில் ஏற்படும் வலி நிவாரணியாக திகழ்கிறது. பிரசவ வலியை தூண்டுவதற்காகவும் இந்த எண்ணெய் நெடுங்காலமாக பயன்படுத்தப்படுகிறது

மூட்டு வலி, கீல் வாதத்துக்கான சிறந்த மருந்தாக ஆமணக்கு எண்ணெய் உள்ளது. இதில் இருக்கும் அழற்சிக்கு எதிரான பண்புகள் வலிகளை போக்க உதவுகிறது

தலை முடி ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. தலைமுடியை ஈரபரமாக்குதல், முடி லூப்ரிகேஷனாகவும் செயல்பட்டு முடி உடைவதை தடுத்து பளபளப்பாக வைக்கிறது 

வேப்பிலை தரும் நன்மைகள்