சிறுநீரகத்தில் புற்றுநோய் பாதிக்கப்பட்டிருப்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள் எவை என்பதை தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
May 18, 2024

Hindustan Times
Tamil

சிறுநீரக புற்றுநோய் தீவிரமான மருத்துவ நிலையாக இருப்பதுடன் பல்வேறு அறிகுறிகளின் மூலம் அவை வெளிப்படுகிறது. ஆரம்பத்தில் இதன் வளர்ச்சியை தடுப்பதன் மூலம் பெரிய பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம்

சிறுநீர் கழிக்கும்போது ரத்தம் வெளியேறுதல். சிறுநீர் சிவப்பு நிறத்தில் அல்லது பழுப்பு நிறத்தில் இருப்பது, புற்று நோய் செல்கள் சிறுநீர் பாதையில் இடம்பிடித்திருப்பதை குறிக்கிறது

முதுகின் கீழ் பகுதியில் வலி ஏற்படுவது. புற்றுநோய் செல்கள் வளர்ச்சியடைந்து சிறுநீரகத்தை சுற்றியிருக்கும் திசுக்களில் அழுத்தம் கொடுப்பதால் இந்த வலி ஏற்படும் 

புற்றுநோய் செல்கள் வளர்ந்து கட்டி பெரிதாகும்போது, சிறுநீரகம் அருகில் கட்டியின் வடிவில் வெளிப்புற தோலில் தெரியும். இது வயிற்றுப்பகுதியின் சைடில் இருக்கும்

தொடர்ச்சியாக சோர்வாக இருப்பது. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் சோர்வு பாதிப்பை ஏற்படுத்தும் 

அடிக்கடி காய்ச்சல் வந்து போவது. புற்றுநோய் பாதிப்புக்கு எதிராக நோய் எதிர்ப்பு அமைப்பு போராட முடியாத காரணத்தால் இவ்வாறு ஏற்படும்

பசியின்மை ஏற்படும். பசி வராமல் இருப்பது, குறைவாக சாப்பிட்டாலே வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுவது போன்று சிறுநீராக புற்றுநோய் பாதிப்பின் விளைவாக இருக்கும்

எதிர்பார்த்திராத அளவில் திடீர் உடல் எடை இழப்பு ஏற்படும் 

ரத்த செல்களின் ஆரோக்கியம் கெட்டு ரத்தசோகை ஏற்படும்

அதிக ரத்த அழுத்தம் ஏற்படுவதுடன், ஹைபர் டென்ஷன் பாதிப்பும் வரும்

Fruits: மழைகாலத்தில் தினமும் சாப்பிட வேண்டிய பழங்கள் இதோ!