சூரியன் அனலை கக்கும் அக்னி நட்சத்திர நாட்களில் ஏற்படும் நோய்களில் இருந்து தப்பிக்க என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

By Karthikeyan S
May 07, 2024

Hindustan Times
Tamil

வெயில் காலத்தில் கோடை கால நோய்களான வேனல் கட்டி, அம்மை நோய், கண் பாதிப்புகள் போன்றவை ஏற்படும். இந்த பாதிப்புகளில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.

அக்னி நட்சத்திர காலத்தில் தண்ணீர், நீர் மோர், விசிறி உள்ளிட்ட பொருட்களை தானம் செய்வதன் மூலம் கோடை காலத்தில் ஏற்படும் நோய் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. 

கோடை காலத்தில் ஏற்படும் நோய்களுக்கு முக்கூட்டு கிரகங்களான சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய மூன்று கிரங்களோடு செவ்வாயும் சேர்ந்து அதிக விளைவுகளை ஏற்படுத்தினாலும் அனேக நோய்களுக்கு  சுக்கிரனே காரணமாக  அமைந்துள்ளது.

கோடை நோய்களை தவிர்க்க சுக்கிரனின் அம்சமான சுத்தமான குடிநீரை அதிகம் குடித்துவந்தாலே பல நோய்களை விரட்டிவிடலாம் என ஆயுர்வேதமும் மருத்துவ ஜோதிடமும் கூறுகிறது. 

சுக்கிரனை காரகமாக கொண்ட இளநீரை கோடை காலத்தில் அதிகம் குடித்து பல நன்மைகளை பெறலாம். 

கோடை வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்பை தணிக்க வேப்பிலை, மஞ்சள் கொண்டு வீட்டை தூய்மைப்படுத்த வேண்டும். 

அக்னி நட்சத்திர காலத்தில் தான தருமம் செய்வதோடு முருகனையும், அன்னை மீனாட்சியையும் வழிபடலாம்.

முருகன், சிவன் அக்னியின் அம்சம். மேலும் சீதளா தேவியை வணங்குவதால் அம்மை போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

ஹெல்த்தி பிரேக் ஃபாஸ்ட்