ஆரஞ்சு பழத்தில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகளை போல் அதன் தோல்களிலும் ஏராளமான சத்துக்கள் நிரம்பியுள்ளன

By Muthu Vinayagam Kosalairaman
May 05, 2025

Hindustan Times
Tamil

ஆரஞ்சு பழத்தில் அதிகப்படியான வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம் நிறைந்துள்ளன. இவை ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை தருகின்றன

ஆரஞ்சு பழத்தை போல் ஆரஞ்சு பழ தோலில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

ஆரஞ்சு தோலில் இடம்பிடித்திருக்கும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு அமைப்புக்கு ஆதரவு அளிக்கிறது. அத்துடன் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை நீக்கி, நோய் எதிர்ப்பு செல்களுக்கு பாதுகாப்பாக உள்ளது

ஆரஞ்சு தோல்களில் இடம்பிடித்திருக்கும் நார்ச்சத்து உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்க உதவுகிறது. இதன் மூலம் ஆரோக்கியமான குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது

நார்ச்சத்து மிக்க ஆரஞ்சு தோல்க் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதன் மூலம் மலச்சிக்கல் ஏற்படுவதை தடுத்து, குடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்களுக்கு ஊட்டமளிக்கிறது

ஆரஞ்சு தோலில் சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பண்புகள் உள்ளன. இவை சுவாச குழாயை ஆற்றுப்படுத்தவும், இருமல் ஏற்படுவதை குறைக்கவும் உதவுகின்றன

ஆரஞ்சு தோலில் உள்ள நுண்ணுயிர்களுக்கு எதிரான பண்புகள் வாய்வழி சுகாதாரத்தை பேனி பாதுகாக்கிறது.வாயில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுப்பதன் மூலம், பல் பிரச்சினைகளின் அபாயத்தைக் குறைக்கிறது

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கும் ஆரஞ்சு தோல்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து, ஃப்ரீ ரேடிக்கல் மற்றும் நச்சுக்களை நீக்க உதவுகிறது

சனி பகவான் ஒரு நீதிமான், துலாம் ராசியில் அவர் உச்சம் அடைவார். கும்பம், மகரம் ராசிகளில் அவர் ஆட்சி ஆவார். மேஷ ராசியில் அவர் நீச்சம் அடைவார்.