ஒரு கிளாஸ் திரிபலா தண்ணீர் குடிப்பதால் உடலில் நிகழும் அற்புத மாற்றங்களும், உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Jan 17, 2025

Hindustan Times
Tamil

திரிபலா பொடி பல்வேறு செரிமான பிரச்னைகளுக்கு தீர்வாக உள்ளது. நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றின் கலவைதான் திரிபலா சூரணம் என்று அழைக்கப்படுகிறது

நார்ச்சத்துகள் நிறைந்த திரிபலா பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பதன் மூலம் பல்வேறு செரிமான பிரச்னைகளுக்கு தீர்வு பெறலாம்

திரிபலா பானம் வயிறு உப்புசம், வயிறு வலி, மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வாக உள்ளது. அத்துடன் உடலில் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை அதிகரிக்கிறது

வயிறு பகுதியை சுற்றி இருக்கும் கொழுப்பை எரிக்க திரிபலா சூரணத்தை பருகலாம். உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்க உதவுவதுடன், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது

திரிபலா சூரணம் மனதை ரிலாக்ஸ் ஆக வைக்க உதவுகிறது. இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் ஏற்படுவதை தடுக்கிறது

சர்க்கரை அளவு அதிகரிப்பை திரிபலா பானம் தடுக்கிறது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வீக்கத்துக்கு எதிரான பண்புகள் திடீரென சர்க்கரை அளவு அதிகரிப்பை கட்டுப்படுத்துகிறது

கொலஸ்ட்ரால் அளவு, ட்ரை கிளைசராய்டுகள் அளவுகளை கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் அதிக ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான நோய்கள் தடுக்கப்படுகிறது

உங்கள் உறவு மோசமடைந்துள்ளது என்பதைக் காட்டும் 6 அறிகுறிகள்