உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை தரக்கூடிய புளி உணவில் பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. புளியை போல் புளிய மரத்தின் இலைகளிலும் பல்வேறு விதமான ஆரோக்கிய நன்மைகள் ஒளிந்துள்ளன

By Muthu Vinayagam Kosalairaman
Jun 02, 2025

Hindustan Times
Tamil

புளிய இலைச் சாறு, மலேரியாவை உண்டாக்கும் பிளாஸ்மோடியம் ஃபால்சிபாரம் என்ற நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைத் தடுக்கும் திறனைக் கொண்டுள்ளது

டயபிடிஸ் பாதிப்பு இருப்பவர்கள் குலுகோஸ் அளவை கட்டுக்குள் வைக்க தங்களது டயட்டில் புளி இலையை சேர்த்துக்கொள்ளலாம் என கூறப்படுகிறது. இவை ரத்த சர்க்கரை அளவை நிலையாக வைத்துக்கொள்ளும் தன்மை கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது

சோர்வு, ரத்த சோகை காரணமாக ஏற்படும் நோய் பாதிப்புகளுக்கு நிவாரணம் அளிப்பதுடன், உடலுக்கு தேவையான ஆற்றலை தரும் தன்மை புளி இலைக்கு உள்ளது

புளி இலையில் அதிகப்படியான வைட்டமின் சி உள்ளது. இவை தொற்றுகள் பாதிப்பை தடுக்கும் வல்லமை கொண்டுள்ளது

புளி இலை சாறுகளை காயங்கள் மற்றும் சரும நோய் பாதிப்பு இடங்களில் பயன்படுத்தினால் விரைவில் குணமடையலாம். இது ஒரு ஆன்டிசெப்டிக்காக சருமத்துக்கு பாதுகாப்பு அரணாக செயல்படுகிறது

புளி இலை சாறு எடுத்துக்கொள்வது பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் உற்பத்தியை அதிகரிக்கும். அத்துடன் பாலின் தரத்தையும் மேம்படுத்தும்

சிறுநீரக ஆரோக்கியத்துக்கும் புளி இலை முக்கிய பங்கு வகிக்கிறது. சிறுநீர் பாதையில் சுத்தமாகவும் தொற்று பாதிப்பு ஏற்படாமலும் பார்த்து கொள்கிறது

வெற்றிகரமான நபர்கள் நேரத்தை மிகவும் திறம்பட பயன்படுத்தும் வழிகள் இதோ!

Photo Credit: Pexels