குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியதாக இருந்து வரும் கலாக்காய் ஊட்டச்சத்துகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கல் நிறைந்ததாக உள்ளது
By Muthu Vinayagam Kosalairaman Apr 16, 2025
Hindustan Times Tamil
கலாக்காயில் வைட்டமின் சி, ஏ, நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுகிறது. இது தவிர கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற தாதுக்களும் இருக்கின்றன
பச்சையாகவும், சட்னி அல்லது குழம்பாகவும் தயார் செய்து சாப்பிடக்கூடிய கலாக்காயில் இருக்கும் உடல் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்
Enter text Here
கலாக்காயில் இடம்பிடித்திருக்கும் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பீனாலிக் சேர்மங்கள் உள்ளிட்ட ஆக்ஸிஜனேற்றிகள் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி செல்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குகின்றன
கலாக்காயில் உள்ள நார்ச்சத்து ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கிறது. குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்தி, மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கிறது
வைட்டமின் ஏ மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் சருமத்திற்கு நன்மை பயக்கிறது. இது ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தை எதிர்த்துப் போராடி சருமம் ஆரோக்கியமான பளபளப்பை பெற ஊக்குவிக்கிறது
கலாக்காயில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் வீக்கத்தை குறைக்கவும், கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். இதில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் பண்புகளும் உள்ளது
கர்ப்பிணிகள் பீன்ஸ் சாப்பிடலாமா? பயன்கள் யாவை என இங்கு தெரிந்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு மிகவும் உதவியானதாக இருக்கும்.