காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வேப்பிலை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Jan 22, 2025

Hindustan Times
Tamil

வேப்பிலையில் ஆன்டி பாக்டீரியா, அழற்சி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு என பல்வேறு மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளன

வேப்பிலை கொத்தை காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சருமம், ரத்த சுத்திகரிப்பு, பொடுகு தொல்லையை போக்குவது உள்பட பல்வேறு நன்மைகளை பெறலாம்

இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. அத்துடன் ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது

வேப்பிலை தொடர்ச்சியாக சாப்பிடுவதனால் பொடுகு தொல்லை நீங்குவதோடு மயிர்கால்களை வலுபெறுகின்றன. இதன் தலைமுடி வளர்ச்சியும் அதிகரிப்பதோடு, வலு பெறுகின்றன

வேப்பிலை மென்று சாப்பிடுவதன் மூலம் சீரான செரிமானத்துக்கு உதவுகிறது. இதில் இருக்கும் ஆன்டி பாக்டீரியா பண்புகள் குடலில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்களை கொல்கிறது. அத்துடன் வயிறு தொடர்பான தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது

வேப்பிலையில் இருக்கும் அழற்சிக்கு எதிரான பண்புகள் கல்லீரல் வீக்கத்தை குறைத்து, அதன் ஆரோக்கியத்தை பேனி பாதுகாக்கிறது

மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்களுக்கு சிறந்த தீர்வாக இருந்து வரும் வேப்பிலை, புற்றுநோய் செல்கள் உருவாக்கத்தை தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக ஆராய்ச்சிகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது 

நெல்லிக்காயில் நார்ச்சத்து, தாதுக்கள், வைட்டமின் சி, ஆக்சிஜனேற்றுங்கள் உள்ளிட்ட சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன

pixabay