பேரிட்சை விதைகளை உங்கள் டயட்டில் சேர்ப்பதால் உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Jun 28, 2024

Hindustan Times
Tamil

அதிகப்படியான ஊட்டச்சத்துகளை கொண்டிருக்கும் பேரிட்சை இருக்கும் விதைகளிலும் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன

தலைமுடி உதிர்வை போக்குவது, சிறுநீரிக கற்களை வெளியேற்றுவது என பல்வேறு நன்மைகள் பேரிட்சை விதைகளில் உள்ளன

பேரிட்சை விதை எண்ணெய் தலைமுடி உதிர்வை தடுக்கும் மருந்தாக செயல்படுகிறது. தலை முடி வளர்ச்சிக்கு உதவுவதுடன், வேர்களில் மசாஜ் செய்வதன் மூலம் ஊட்டம் அளிக்கிறது

பேரிட்சை விதை பவுடரை வைத்து டீ தயார் செய்து பருகினால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுவதோடு, இன்சுலின் உற்பத்தியையும் அதிகரிக்கிறது

பேரிட்சை விதை எண்ணெய்யில் வைட்டமின் பி,ஏ, இரும்பு சத்து இருப்பதால் சருமத்துக்கு ஈரப்பதம் அளித்து சுருக்கங்களை போக்க உதவுகிறது. இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், கிருமிகளுக்கு எதிரான பண்புகள் சரும ஆரோக்கியத்துக்கு நன்மை தருகிறது

உடலில் ஏற்படும் காயங்களுக்கு மருந்தாகவும், அதை ஆற்றுப்படுத்தவும் உதவுகிறது. பேரிட்சை விதைகளை உடைத்து அதை குளிர்ச்சியாக்கி பாதிக்கப்பட்ட இடங்களில் தடவுவதன் மூலம் பலன் பெறலாம்

சிறுநீரக கற்கள் இருப்பவர்கள் பேரிட்சை விதைகளை நொறுக்கி பிளெண்ட் செய்து தண்ணீருடன் நாள்தோறும் இரண்டு முறை குடித்து வந்தால் கற்கள் உடைந்து வெளியேறும் 

கர்ப்பினி பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி, பால் உற்பத்தியை  அதிகரிக்கிறது. கர்ப்ப காலத்தில் டிஎன்ஏ ஒருமைப்பாட்டை தடுக்கிறது

பேரிட்சை விதை எண்ணெய்யில் வைட்டமின் கே, ஏ நிறைந்து இருப்பதால் நகங்களில் ஆரோக்கியத்தை பேனி பாதுகாக்கிறது 

பற்களை ஆரோக்கியமாக்கும் உணவுகள்