பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கும் ஊதா நிறத்தில் இருக்கும் சங்கு பூவை வைத்து டீ தயார் செய்து பருகினால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்
By Muthu Vinayagam Kosalairaman Jul 26, 2024
Hindustan Times Tamil
மருத்துவ மூலிகையாக இருந்து வரும் சங்கு பூ, பண்டைய காலத்தில் இருந்து ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது
சங்கு பூவில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்க்ள், அடிப்படை கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன
சங்கு பூவை வைத்து தயார் செய்யப்படும் டீ, ப்ளூ டீ என்று அழைக்கப்படுகிறது
ப்ளூ டீயில் ஆன்டிாக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுகின்றன. இவை உடலில் ப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை தடுக்கிறது. இதன் மூலம் நாள்பட்ட நோய் பாதிப்பு ஏற்படுவது, வயது முதிர்வு தோற்றதை தடுக்கிறது
சங்கு பூவில் இருக்கும் சேர்மானம் அழற்சிக்கு எதிரான பண்புகளை கொண்டுள்ளது. இவை உடல் பிரச்னையால் ஏற்படும் விக்கத்தை குறைக்கிறது
உடலில் ஏற்படும் உஷ்ணத்தை குறைக்கு தன்மை கொண்டதாக சங்கு பூ உள்ளது. குறிப்பாக பித்தத்தை கட்டுக்குள் வைக்கிறது
இதில் இருக்கும் ப்ரீ ரேடிக்கல்கள் சருமத்தில் வயது மூப்படையும் தோற்றத்தை தடுக்கிறது. ஒட்டுமொத்த உயிர் சக்தியை மேம்படுத்துகிறது
மனஅழுத்தம், கவலையை குறைக்கும் தன்மை கொண்ட பண்புகள் ப்ளூ டீயில் உள்ளது. மூளையில் இருக்கும் நரம்பியக்கடத்தி தொடர்பு கொண்டு ரிலாக்ஸ் ஆக உணர வைக்கிறது