கிர்ணி பழத்தின் விதைகளை உங்களது டயட்டில் சேர்த்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Mar 29, 2024

Hindustan Times
Tamil

முலாம் பழம் என்றும் அழைக்கப்படும் கிர்ணி பழத்தில் அடிப்படை வைட்டமின்களான  ஏ, கே, சி, பி1, ஈ ஆகியவற்றுடன் துத்தநாகம், புரதம், ஆரோக்கிய கொழுப்புகள், கார்ப்போஹைட்ரேட்கள் நிறைந்துள்ளன

இதய, சருமம் ஆரோக்கியம் முதல் எடை குறைப்பு, செரிமான ஆரோக்கியம் வரை பல்வேறு நன்மைகள் கொண்டிருக்கிறது

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கிர்ணி விதைகளில் இடம்பிடித்திருப்பதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இருத தசைகளை ரிலாக்ஸ் செய்கிறது. இதனால் பக்கவாதம், ஹார்ட் அட்டாக் பாதிப்பு அபாயம் குறைகிறது

டயட்ரி நார்ச்சத்து கிர்ணி விதைகளில் இடம்பிடித்திருப்பதால் குடல் இயக்கத்தை செயல்படுத்து மலச்சிக்கல் ஏற்படுவதை தடுப்பதுடன் செரிமான ஆரோக்கியத்தையும் மேம்படுத்துிகிறது

வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்று பாதிப்புகள் உண்டாவதை தடுக்கிறது

இதில் இருக்கும் வைட்டமின் ஏ,சி, ஈ ஆகியவை சருமம் சேதமாவதை தடுக்கிறது. கொல்ஜன் உற்பத்தியை அதிகரித்து, வயது மூப்பாவதை மெதுவாக்குகிறது

வயிறு நிரம்பிய உணர்வை தருவதால் தேவையில்லாம் சாப்பிடுவதை குறைப்பதன் மூலம் உடல் எடையை நிர்வகிக்க உதவுகிறது

இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அழற்சியை குறைத்து, நாள்பட்ட நோய் பாதிப்புகளை தடுக்கிறது

கிர்ணி விதைகளில் மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்திருப்பதால் எலும்புகளின் ஆரோக்கியத்தை பேனி பாதுகாத்து, எலும்புப்புரை பாதிப்பு ஏற்படுவதை தடுக்கிறது

மயிர்கால்கலளை வலுப்படுத்தி போதிய அளவில் ஊட்டமளித்து தலை முடி வளர்ச்சிக்கு உதவுகிறது

வைட்டமின் ஏ, பீட்டா கரோடீன், ஜீயாக்ஸ்தனின் கண்களின் ஆரோக்கியத்தை வலுப்படுத்தி கூர்மையான பார்வை பெற உதவுகிறது 

நெய்