ஏரளாமான உடல் ஆரோக்கிய நன்மைகள் கொண்டிருக்கும் நெய் வைத்து இந்த குளிர் காலத்தில் காபி பருகுவதால் புத்துணர்ச்சியும், ஆற்றலும் பெறலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Jan 11, 2024

Hindustan Times
Tamil

காலை எழுந்தவுடன் காபி பருகுவதன்   மூலம் புத்துணர்ச்சி, ஆற்றலுடன் அன்றைய பொழுதை தொடங்கலாம். உங்களது காபியில் கூடுதல் சிறிது அளவு நெய் சேர்த்தால் கூடுதல் ஆற்றலை பெறலாம்

வழக்கமாக காபி தயார் செய்த பிறகு அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு நெய் சேர்த்து, நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் சர்க்கரை தேவையான அளவு சேர்த்து கொள்ளலாம்

காபியில் நெய் கலந்து குடிப்பதால் சில ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கின்றன. அவை பற்றி தெரிந்து கொள்ளலாம்

உடல் காஃபின் உறிஞ்சுவதை மெதுவாக்குவதன் மூலம் நெய் நிலையான ஆற்றலை பெற உதவுகிறது. அத்துடன் உடல் ஆற்றலில் ஏற்படும் திடீர் ஏற்ற, இறக்கங்களை தடுக்கிறது

நெய்யில் ஒமேகா 3,6, 9 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருப்பதால் அவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்து, வளர்சிதை மாற்றத்தை ஊக்கப்படுகிறது. அத்துடன் மூளை செயல்பாட்டுக்கும் ஆதரவு அளிக்கிறது

உடலில் ஏற்படும் அமிலத்தன்மை பிரச்னையை தணிக்கிறது. இதன் மூலம் செரிமானம் சீராகி, இரைப்பை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

குளிர் காலத்தில் இயற்கையான முறையில் உடலை கதகதப்பாக வைக்க உதவுகிறது 

நோய் எதிர்ப்பு சக்தி