ஆரோக்கியமான எலும்புகளை பெறுவதற்கு தொடர்ச்சியாக சாப்பிட  வேண்டிய உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Aug 11, 2023

Hindustan Times
Tamil

எலும்புகளின் ஆரோக்கியத்தை பேனி பாதுகாப்பதற்கு ஏற்ப உணவுகள் சாப்பிட்டால் உரிய பலனை பெறலாம். அத்துடன் எலும்பு தொடர்பான நோய் பாதிப்புகளும் ஏற்படாமல் தவிர்க்கலாம்

பால் சார்ந்த உணவு பொருளான சீஸ்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் சீஸ் உணவில் கால்சியம் அடர்த்தியாக உள்ளது. காலோரிக்களும் நிறைந்து காணப்படுகின்றன. இவற்றுடன் புரதம், மெக்னீசியம், வைட்டமின் ஏ போன்றவையும் உள்ளன

மொச்சை கொட்டை 

மெக்னீசியம், புரதம், பொட்டாசியம்  ஆகிய ஊட்டச்சத்துகளின் ஆதாரமாக திகழும் மொச்சை கொட்டை எலும்புகளில் உள்ள தாதுக்களின் அடர்த்தியை பராமரிக்கிறது. இதனால் எலும்புகளும் வலு பெறுகின்றன

பசலை கீரை

கால்சீயம், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்து காணப்படும் பசலை கீரைகள் எலும்புகளை வலுப்படுத்துவதுடன், எலும்பு முறிவு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கிறது

அத்திப்பழம்

அத்திப்பழத்தில் வைட்டமின் கே, நார்ச்சத்து, கால்சீயம், பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன. இவை எலும்புகளை வலுப்படுத்தி, ரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது

பால்

அனைத்து வயதினரும் பருககூடிய பானமாக  இருந்து வரும் பாலில் கால்சீயம், புரதம் ஆகியவற்றுடன் தேவையான வைட்டமின்களும் உள்ளது.  இவை எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி,  எலும்பு சார்ந்த நோய்களின் பாதிப்பை தடுக்கிறது 

டிசம்பர் 06-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்