ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் சிஎஸ்கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது

Photo Credits: Instagram/@iplt20

By Muthu Vinayagam Kosalairaman
Jun 01, 2023

Hindustan Times
Tamil

இந்த சீசனில் சிஎஸ்கே அணி வீரர்களின்  ஒட்டுமொத்த ஆட்டத்திறனை பார்க்கலாம்

Photo Credits: Instagram/@iplt20

ஐபிஎல் முதல் தொடரான 2008 முதல் விளையாடி வரும் சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி இதுவரை 249 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். மொத்தம் 5082 ரன்கள் அடித்துள்ள 135. 96 ஸ்டிரைக் ரேட்டை கொண்டுள்ளார்

சிஎஸ்கே அணியில் முன்னணி பேட்ஸ்மேன்களாக டேவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பத்தி ராயுடு, அஜிங்கியா ரஹானே, ஷிவம் துபே ஆகியோர் விளையாடினர். கான்வே - ருதுராஜ் ஆகியோர் சிறந்த பேட்டிங் இணையாக அமைந்தனர்

Photo Credits: Instagram/@iplt20

சிஎஸ்கே அணியின் பெளலர்களை பொறுத்தவரை தீபக் சஹார், துஷார் தேஷ்பாண்டே, மதிஷா பதிரனா, ஆகாஷ் சிங் ஆகியோர் இருந்தனர்

Photo Credits: Instagram/@iplt20

சிஎஸ்கே ஆல்ரவுண்டர்களில் ரவிந்திர ஜடேஜா, மோயின் அலி,  மிட்செல் சாண்ட்னர், டுவெய்ன் ப்ரீடோரியஸ், மகேஷ் தீக்‌ஷனா, ஹங்கர்கேகர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் களம் இறங்கினர்

Photo Credits: Instagram/@iplt20

இந்த சீசனின் டாப் ஸ்கோரராக டேவான் கான்வே 16 போட்டிகளில் 672 ரன்கள் குவித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ருதுராஜ் கெய்க்வாட் 590 ரன்கள் எடுத்துள்ளார்

ஆல்ரவுண்டராக இருந்தாலும் பேட்டிங்கில் ஜொலித்த ஷிவம் துபே 418 ரன்கள் எடுத்தார். இந்த சீசனின் சிக்ஸர் மன்னாக இருந்த துபே 35 சிக்ஸர்கள் பறக்கவிட்டு அதிக சிக்ஸர் அடித்த பேட்ஸ்மேன் லிஸ்டில் இரண்டாவது இடத்தில் உள்ளார்

Photo Credits: HT File Photo

சிஎஸ்கே பெளலர்களில் துஷார் தேஷ்பாண்டே அதிகபட்சமாக 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக பதிரனா 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்

Photo Credits: PTI

ஆல்ரவுண்டர்களில் ரவிந்திர ஜடேஜா 190 ரன்கள் அடித்ததோடு, 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்

சிஎஸ்கே அணிக்காக ருதுராஜ் கெய்க்வாட் 17 கேட்சளை பிடித்து, அதிக கேட்ச் பிடித்தவர்களில் முதல் இடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ஜடேஜா 9, தோனி 7 கேட்ச்களை பிடித்துள்ளனர்

Video Credits: Instagram/@iplt20

சிஎஸ்கே அணி 2010, 2011, 2018, 2021 சீசன்களை தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது

வெயிலில் நம்மை காப்பாற்றும் உணவுகள்