சமையலுக்கு உகந்ததாகவும், சமையலுக்கு பயன்படுத்தக்கூடாத எண்ணெய் வகைகள் எவை என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம் 

By Muthu Vinayagam Kosalairaman
Jan 18, 2024

Hindustan Times
Tamil

சமையலுக்கு மிகவும் உகந்ததாக இருக்கும் ஆலிவ் எண்ணெய் சுத்திகரிக்கப்படாத இயல்பை கொண்டதாக இருப்பதால் சிறந்த தேர்வாக உள்ளது. இதயத்துக்கு நன்மை தரக்கூடிய மோனோ ஒற்றை நிறைவுறா கொழுப்புகள், பாலி ஒற்றை நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் இதில் அதிகம் நிரம்பியுள்ளன

அதிக நிறைவுற்ற கொழுப்பு இடம்பிடித்திருக்கும் தேங்காய் எண்ணெய் சமையலில் மிதமாக சேர்க்கப்பட வேண்டும் என கூறப்படுகிறது. அதேசமயம் அனைத்து நிறைவுற்ற கொழுப்புகளும் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிப்பதில்லை என்கிற பேச்சும் உள்ளது

கமர்ஷியல் வெஜிடபிள் எண்ணெய்கள் கடுகு, சோளம், சோயபீன், பாம் ஆயில், சன்பிளவர் ஆயில் ஆகியவற்றின் கலவையாக இருந்து வருவதுடன், சுத்தரிகரிக்கப்பட்டதாகவும் உள்ளது. இவற்றில் சுவை மற்றும் அடிப்படை ஊட்டச்சத்துகள் குறைவாக உள்ளது

கடுகு எண்ணெய்யில் மோனோ ஒற்றை நிறைவுறாத, பாலி நிறைவுறாத கொழுப்புகள் கலவை உள்ளது. இதை குளிர் அழுத்த மாறுபாட்டை தேர்வுசெய்யாத வரையில் குறைவான ஊட்டச்சத்துக்களை மட்டும் ஏற்படுத்தலாம்

அவகோடா எண்ணெய்யில் அதிக அளவில் மோனோ ஒற்றை நிறைவுறா, பாலி ஒற்றை நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. பல்வேறு விதமான சமையலுக்கு உகந்த தேர்வாக இருக்கும் இந்த எண்ணெய்யை குறிப்பாக அதிகமாக சூடுபடுத்தும் உணவுகள், ப்ரை வகை உணவுகளுக்கு பயன்படுத்தலாம்

வைட்டமின் ஈ, ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் கொண்டிருக்கும் சன்பிளவர் எண்ணெய்யை மிதமான அளவில் பயன்படுத்தலாம். இதன் மூலம் உடலில் நிகழும் ஏற்றத்தாழ்வுகள், அதிகமான அழற்சிகள் தடுக்கப்படும்

அதிக அளவில் ஒற்றை நிறைவுறா கொழுப்புகள், உணவுகளுக்கு நறுமணம் தரக்கூடியதாக இருப்பதுடன் அதிகமாக  சூடுபடுத்தும் உணவுகளுக்கு உகந்ததாக உள்ளது

குறைந்த ஸ்மோக் பாயிண்ட் கொண்ட வால்நட் எண்ணெய் சமையலுக்கு உகந்தது இல்லை என்றாலும்,  பேன் கேக்குகள், பழங்கள், ஐஸ்க்ரீம் மீது டாப்பிங்காக பயன்படுத்தலாம். இதில் இடம்பிடித்திருக்கும் ஒமேகா 6  முதல் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் விகிதம் அழற்சிகளை கட்டுப்படுத்துகிறது

ஒமேகா 3 அதிகமாக இருக்கும் ஆளிவிதை எண்ணெய் குறைவான ஸ்மோக் பாயிண்ட் இருப்பதால் சமையலுக்கு பயன்படுத்த முடியாது.  குளிர்ச்சியான பகுதியில் வைத்திருப்பதன் மூலம் சத்துக்களை முழுமையாக பெறலாம்

ஒற்றை நிறைவுறாத, பாலி நிறைவுறாத கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கும் எள்ளு எண்ணெய் அதிக சூடுபடுத்தும்  உணவுகளுக்கு உகந்த எண்ணெய்யாக உள்ளது

கண்களை பாதுகாக்கும் உணவுகள்