முள்ளங்கி இலைகளில் இருக்கும் உடல் ஆரோக்கிய நன்மைகள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Jan 08, 2025

Hindustan Times
Tamil

முள்ளங்கியை பல வகைகளில் சமைத்து சாப்பிடும் நாம் அதன் இலைகளை தவிர்த்து விடுகிறோம். ஆனால் ஊட்டச்சத்துகளின் ஆதாரமாக அவை திகழ்கின்றன

பன்முகதன்மை கொண்ட காய்கறிகளின் ஒன்றாக இருக்கும் முள்ளங்கியின் மேற்பறப்பில் குடுமி போல் இருக்கும் அதன் இலைகள், முள்ளங்கி கீரைகள் என அழைக்கப்படுகின்றன. இதில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்பதை பார்க்கலாம்

வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் நிரம்பி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ரத்தத்தில் செல் உற்பத்தியை மேம்படுத்துகிறது

முள்ளங்கி மேல் இருக்கும் இலைகள் குறைவான கலோரிகள் கொண்டதாக இருப்பதால் எடை குறைப்புக்கு உதவுகிறது

முள்ளங்கி இலைகளில் இருக்கும் ஆந்தோசையனின்கள் வைட்டமின் சி ஆகியவை ப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது. இது இதய ஆரோக்கியத்துக்கு அடிப்படையாக இருப்பதுடன், மாரடைப்பு ஏற்படுவதையும் தடுக்கிறது

இதில் இருக்கும் வைட்டமின் சி கொலஜன் உற்பத்தியை மேம்படுத்தி சருக நெகிழ்வுதன்மையை அதிகரிக்கிறது. அத்துடன் சுருக்கங்களை போக்கி பளபளப்பை தருகிறது

ரத்த நாளங்களை நெகிழ்வு அடைய செய்து பெருந்தமனி தடிப்பு, இருதய நோய் ஆபத்தை குறைக்கிறது

நறுக்கப்பட்ட முள்ளங்கி இலைகள் ஒரு கப் அளவில் 1.2கிராம் கார்ப்போஹைட்ரேட், 0.5கிராம் நார்ச்சத்து உள்ளன. இவை ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது

CLICK FOR MORE VISUAL STORIES

நயன்தாராவிற்கு பல்வேறு திரைப்படங்களில் பின்னணி குரலாக இருந்த தீபா வெங்கட், அவரைப்பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார்.