உடலை டிடாக்ஸ் செய்ய உதவும் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் எத்தனை நன்மைகள் பாருங்க
Pexels
By Pandeeswari Gurusamy Aug 29, 2024
Hindustan Times Tamil
உடலில் உள்ள கெட்ட கெழுப்பை நீக்கி உடல் எடையை குறைக்க உதவும் பீட்ரூட்டில் தினமும் காலையில் ஜூஸ் செய்து குடித்து பாருங்கள். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உள்ள உதவும். பீட்ரூட்டில் உள்ள சத்துக்கள், நன்மைகள், மற்றும் ஜூஸ் செய்முறை குறித்து இங்கு பார்க்கலாம்.
Pexels
பீட்ரூட் ஜூஸ் செய்முறை : பீட்ரூட் தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ள வேண்டும். அதில் ஒரு சிறிய துண்டு இஞ்சியையும் தோல் நீக்கி சுத்தம் செய்து சேர்த்து கொள்ள வேண்டும். அதில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வடி கட்டி கொள்ள வேண்டும். வடிகட்டிய ஜூஸ் உடன் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாற்றை சேர்க்க வேண்டும். அதில் இரண்டு புதினா இலையையும் சேர்த்து ஜூஸ் கப்பிற்கு மாற்றினால் டிடாக்ஸ் புதினா ஜூஸ் ரெடி..
Pexels
பீட்ரூட்டில் உள்ள சத்துக்கள்: பீட்ரூட்டில் மெக்னீசியம், கால்சியம், இரும்பு, நைட்ரிக் ஆக்சைடு, பாஸ்பரஸ், சோடியம், விட்டமின் (ஏ, பி6, சி) ஆகிய சத்துக்கள் உள்ளது. மேலும் ஆண்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது.
Pexels
பீட்ரூட் ஜூஸ் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க உதவுகிறது. இதனால் உடல் எடை படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளது. ரத்தத்தில் உள்ள நச்சுகளை அடித்து வெளியேற்றுவதோடு புதிய ரத்தம் உருவாகவும் உதவுகிறது. இதனால் இரத்த சோகை உள்ளவர்களுக்கு பீட்ரூட் மிகவும் உதவும் உணவுப் பொருளாகும்.
Pexels
பீட்ரூட் கல்லீரல் பிரச்சனைகளை சரி செய்ய உதவும். மேலும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்க உதவும்.
வாரத்திற்கு இரண்டு முறை பீட்ரூட் ஜூஸ் எடுத்து வந்தால் சருமம் பொலிவு பெரும்.
pixabay
பீட்ருட் சாற்றில் உள்ள நைட்ரேட்டுகள் நைட்டிக் ஆக்சைடாக மாற்றப்படுகிறது. இதனால் இரத்த நாளங்கள் தளர்வு பெறும். இது இதய செயல் பாட்டை பராமரிக்கவும், உயர் ரத்த அழுத்த அபாயத்தை குறைக்கவும் உதவும். இப்படி பல நன்மைகள் கொண்ட பீட்ரூட்ஜூஸை வெறும் வயிற்றில் குடிப்பது மிகவும் நல்லது.
pixa bay
அறுசுவை உணவுகளின் குறிப்புகளை நீங்களும் அறிந்து கொள்ள, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் இணைந்திருங்கள். சமூக வலைதள பக்கங்களிலும் எங்களை தொடரலாம்.
pixa bay
தினமும் 10 ஆயிரம் அடிகளுக்கு மேல் நடப்பதால் உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் நன்மைகள் என்னெவல்லாம் என்பதை பார்க்கலாம்