தினமும் கற்றாழை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் பலன்களை பாருங்க!

By Pandeeswari Gurusamy
May 22, 2024

Hindustan Times
Tamil

அனைவரின் வீடுகளிலும் வளர்க்க வேண்டிய தாவரம் கற்றாழை. தினமும் கற்றாழைச்சாறை தினமும் பருகுவதால் ஏற்படும் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.

உடலில் இருந்து அசிடிட்டியை வெளியேற்றுகிறது மற்றும் இது உடலின் அமில அளவையும் சரியாக பராமரிக்கிறது. இதை காலையில் வெறும் வயிற்றில் பருகவேண்டும். இது உடல் தேவையான ஆற்றலை அதிகம் உறிஞ்ச உதவும்.

கற்றாழையில் வைட்டமின்கள், எண்சைம்கள், மினரல்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் உடலை நீர்ச்சத்துடன் வைக்க உதவுகிறது. உடல் கழிவை வெளியேற்ற உதவுகிறது. இது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நன்றாக செயல்பட உதவுகிறது. கற்றாழைச்சாறை உடற்பயிற்சிக்குப்பின்னர் பருகுவது, பயிற்சியால் உடல் இழந்த தண்ணீரை சமப்படுத்த உதவுகிறது.

Pexels

உங்கள் உடலில் கல்லீரல் சரியாக செயல்படவில்லையென்றால், அது மலச்சிக்கலை ஏற்படுத்துகிறது. இறுதியில், வயிறு உப்புசம், வலி, வாயுத்தொல்லை, வாய் துர்நாற்றம் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. கற்றாழைச்சாறில் உள்ள ஃபைட்டோநியூட்ரியன்ட்கள் அதிகம் உள்ளது. உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்குகிறது. இது கல்லீரல் நன்றாக செயல்பட உதவுகிறது.

Pexels

கற்றாழைச்சாறு, குடலுக்கு நல்ல உணர்வைக் கொடுக்கும். இதில் ஆந்த்ராகுயினனன்கள் உள்ளது. இது இயற்கை மலமிலக்கியாகும். இதனால் செரிமானம் மேம்படுகிறது. கற்றாழைச்சாறில் உள்ள அதிகப்படியான நீர்ச்சத்துக்கள், குடலிலும் நீர்ச்சத்தை அதிகரிக்கிறது. உங்கள் குடல் இயக்கத்தை அதிகரிக்க உதவுகிறது.

Pexels

கற்றாழையில் வைட்டமின்கள், மினரல்கள் உள்ளது. வைட்டமின் பி, சி, இ மற்றும் ஃபோலிக் அமிலம் உள்ளது. சிறிய அளவிலான கால்சியம், காப்பர், குரோமியம், சோடியம், செலினியம், மெக்னீசியம், பொட்டாசியம், மாங்கனீஸ் மற்றும் சிங்க் ஆகிய சத்துக்கள் உள்ளது. வைட்டமின் பி மூளை ஆரோக்கியத்துக்கு நல்லது. வைட்டமின் சி நோய் எதிர்ப்பை பராமரிக்கிறது. இதய நோய் ஆபத்தை குறைக்கிறது. வைட்டமின் இ, புற்றுநோயிடம் இருந்து உடலை காக்கிறது. ஃபோலிக் அமிலம் இதய நோய் மற்றும் பக்கவாத ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது.

Pexels

கற்றாழைச்சாறில் உள்ள ஆல்கலைன் உட்பொருட்கள், நெஞ்செரிச்சலை குறைக்கிறது. இது வயிற்றில் உள்ள அமிலங்களை நடுநிலைப்படுத்துகிறது. கற்றாழைச்சாறில் உள்ள உட்பொருட்கள் வயிற்றில் சுரக்கும் அமிலங்களை கட்டுப்படுத்துகிறது. இது வாயுத்தொல்லையைப் போக்குகிறது. அல்சரை குணப்படுத்துகிறது. அது அதிகரிக்காமல் தடுக்கிறது.

Pexels

உங்களுக்கு ஆசிட் ரிஃபிளக்ஸால் நீங்கள் பாதிக்கப்பட்டு, அதன் மூலம் எரிச்சல் ஊட்டும் குடல் பிரச்னைகள் எற்பட்டால், கற்றாழைச்சாறு உங்களுக்கு சிறந்த தீர்வு தரக்கூடியது. உங்களின் செரிமான மண்டலம், உங்கள் உடல் நன்றாக ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு நன்றாக இயங்கவேண்டும். சர்க்கரையையும், கொழுப்பையும் உடைக்கும் எண்சைம்கள் கற்றாழையில் உள்ளது. இது உங்கள் செரிமான மண்டலத்தை நன்றாக இயங்கச்செய்கிறது.

Pexels

கற்றாழைச்சாறில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள ஃப்ரி ராடிக்கல்களை நீக்க உதவுகிறது. இது கல்லீரல், சிறுநீரகம், சிறுநீர்ப்பை மற்றும் மண்ணீரல் ஆகிய அனைத்தையும் சுத்தம் செய்ய உதவுகிறது. இது உங்கள் உடலில் நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது. உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாக இருந்தால், அது நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது.

Pexels

கற்றாழைச்சாறு, இந்த கடுமையான வாழ்க்கை சூழலுக்குத் தேவையான நன்மைகளை வழங்குகிறது. எனவே இந்த கற்றாழைச்சாறை உங்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ளுங்கள். இது உங்கள் உடலின் தசை மண்டலத்தை மேம்படுத்துகிறது. உங்கள் உடலுக்கு தேவையான புரதச்சத்துக்களைக் கொடுக்கிறது. ஒரு டம்ளர் கற்றாழைச்சாறு உங்கள் உடலுக்கு ஒரு நாளைக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது.

Pexels

வெண்டைக்காய் நீர் பருகுவதால் உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்