வைட்டமின் பி12 உடல் ஆரோக்கியத்தில் என்னென்ன மாற்றங்களை செய்கின்றன என்பதை பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman Sep 26, 2024
Hindustan Times Tamil
வைட்டமின் பி12, கோபலாமின் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வைட்டமின் உடலில் தனக்கு தானே உற்பத்தி செய்து கொள்கிறது
வைட்டமின் பி12 சில விலங்குகளின் பொருள்களிலும், சப்ளிமெண்ட்கள், இன்ஜெக்ஷன்களிலும் கிடைக்கிறது
வைட்டமின் பி12 உடலில் சிவப்பு ரத்த அனுக்கள் உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ரத்த சோகை ஏற்படுவதை தடுப்பதுடன் உடலுக்கு ஆக்சிஜன் பயணத்தை உறுதி செய்கிறது
போதிய அளவிலான வைட்டமின் பி12 சத்துக்கள் எலும்புகளின் அடர்த்தியை பராமரிக்கிறது. இதனால் கீழ்வாதம் போன்ற ஆபத்துகள் குறைகின்றன. மாகுலர் சிதைவு போன்ற கண் பிரச்னை ஏற்படுவதையும் தடுக்கிறது
கர்ப்பினி பெண்களுக்கு வைட்டமின் பி12 மிகவும் அவசியமானதாக உள்ளது. குழந்தை பிறப்பின் போது குறைபாடுகள் மற்றும் சிக்கல்கள் ஏற்படுவதை தடுக்கிறது
மனநிலை மாற்றத்தை மேம்படுத்தி, அறிவுசார் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது. வயதானவர்களுக்க ஏற்படும் மறதி, மனஅழுத்தம் போன்ற பிரச்னைகளை தடுக்கிறது
போதிய அளவில் வைட்டமின் பி12 சத்துக்களை பெறுவதன் மூலம் சருமம், தலைமுடி, நகங்கள் தோல் அழற்சி பாதிப்புகள் தாக்கங்களை தவிர்க்கிறது
மகரம் ராசியை விட்டு விலகும் ஏழரை சனி! கொட்டும் பணத்தை பிடிக்க ரெடியா? காத்து இருக்கும் சக்ரவர்த்தி வாழ்கை!