கோடை காலத்தில் சாப்பிடக்கூடிய பழங்களில் ஒன்றாக பலாப்பழம் இருந்து வருகிறது. இதில் இருக்கும் சத்துக்களும், ஆரோக்கிய நன்மைகளும் தெரிந்து கொள்ளலாம்
By Muthu Vinayagam Kosalairaman May 06, 2025
Hindustan Times Tamil
இந்திய மற்றும் ஆசிய நாடுகளில் அதிகம் சாப்பிடக்கூடிய பழமாக பலாப்பழம் இருந்து வருகிறது. இயற்கையான இனிப்பு சுவையும், இறைச்சி போன்ற இதன் அமைப்பும் பலரும் விரும்பி சாப்பிடக்கூடிய பழமாக மாற்றியுள்ளது
பலாப்பழத்தில் அதிகப்படியான பொட்டாசியம், நீர்ச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இவை உடலில் திரவ சமநிலை மற்றும் நீரிழப்பைத் தடுக்கிறது. வியர்வையின் மூலம் இழக்கப்படும் எலக்ட்ரோலைட்டுகளை நிரப்புவதற்கு ஏற்ற பழமாகவும் அமைகிறது
பலாப்பழத்தை பழுத்த வடிவத்தில் சாப்பிடுவது வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. இதில் இருக்கும் குளிர்ச்சியான பண்புகள் உடலில் உள் வெப்பத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது. கோடையில் ஏற்படும் பித்த தோஷத்தை நிர்வகிக்க உதவி வெப்ப தாக்கத்தின் விளைவை குறைக்கிறது
பலாப்பழத்தில் இருக்கும் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. கோடையில் தொடர்ந்து இந்த பழத்தை உட்கொள்வது தொற்றுகள், ஒவ்வாமை மற்றும் கோடை சளி போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் என கூறப்படுகிறது
பலாப்பழத்தில் உள்ள நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் கலவை ஆரோக்கியமான கொழுப்பின் அளவையும், ரத்த அழுத்தத்தையும் ஆதரிக்கிறது. கோடையில் வெப்பத்தின் தாக்கம் இதயத்தில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே பலாப்பழத்தின் ஊட்டச்சத்துக்கள் இதய ஆரோக்கியத்துக்கு உதவியாக இருக்கும்
நன்கு பழுத்த பலாப்பழம் பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற இயற்கை சர்க்கரைகளால் நிரம்பியுள்ளது, இது விரைவான மற்றும் நீடித்த ஆற்றலை வழங்குகிறது. கோடை காலநிலைக்கு ஆற்றல் மிகவும் அவசியமானது. ஆற்றல் இல்லாமை காரணமாக நீரிழப்பு மற்றும் சோர்வு போன்றவை ஏற்படுகிறது
பலாப்பழத்தில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின் ஏ சருமத்தை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகின்றன. கோடையில் பலாப்பழம் சாப்பிடுவது சரும வறட்சியைக் குறைக்கும், சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கும் மற்றும் கொலாஜன் உற்பத்தியை ஆதரிக்கும்
காரமான பலாப்பழ கறி முதல் இனிப்பு மிக்க ஸ்மூத்திகள் வரை, இந்த பழம் பல்வேறு கோடைகால உணவுகளுக்கு ஏற்றதாக உள்ளது. சாப்பிட்டவுடன் வயிறுநிரம்பிய திருப்தியை தருகிறது
உங்க சமையல் மணம் அண்டை வீட்டாரையும் சுண்டி இழுக்க வேண்டுமா.. சூப்பர் டிப்ஸ் இதோ!