Chandra Athi Yogam: மேஷம் முதல் மீனம் வரை! செல்வம் கொட்டும் சந்திர அதி யோகம் யாருக்கு? ஜோதிடம் சொல்லும் ரகசியம்!

By Kathiravan V
Jun 29, 2024

Hindustan Times
Tamil

நவக்கிரகங்களில் ஒன்றான சந்திர பகவான், தாயாரை குறிக்கும் கிரகமாக உள்ளது. இந்த கிரகம் பலவித யோகங்களில் தொடர்பு உடையதாக உள்ளது. அதில் ஒரு யோகமாக சந்திர அதி யோகம் விளங்குகின்றது.  வளர்பிறை, தேய்பிறை தத்துவத்தால் பாதி நாட்கள் சுபர் ஆகவும், பாதி நாட்கள் பாவி ஆகவும் சந்திரன் விளங்குகின்றார். குளுமை கிரகம் ஆன சந்திரன், மனோக்காரகன் ஆவார்.

உடல் பலம், சொத்து, சுக சேர்க்கையின் அதிபதியாக சந்திரன் உள்ளார். சூரியனுக்கு அடுத்தபடியான ஒளி கிரகமாக சந்திரன் உள்ளார்.  ஜோதிட விதிகளில் படி சூரியனை தந்தையாகவும், சந்திரனை தாய் ஆகவும் கணிகின்றனர்.

ஒருவரது ஜாதகத்தில் 6,7,8ஆம் இடங்களில் இயற்கை சுபர்கள் அமையும்போது சந்திர அதி யோகம் உண்டாகின்றது. 

இயற்கை சுபர்கள் எனும்போது புதன், சுக்கிரன், குரு பகவானை எடுத்து கொள்ள வேண்டும்.  குறிப்பாக பாவிகளுடன் சேராத புதனாக இருக்க வேண்டும். இவர்கள் தனித்தனியாகவோ அல்லது சேர்ந்தோ இருக்கும் போது சந்திர அதி யோகம் உண்டாகின்றது.

ஜோதிடத்தில் ஏழரை சனி, அஷ்டமசனி, ராகு,கேது பெயர்ச்சி உள்ளிட்ட கோச்சார பலன்களின் பாதிப்பு இல்லாத நிலையை சந்திர அதி யோகம் உண்டாக்கும். இவர்களுக்கு கோச்சார பலன்களில் பாதிப்புகள் குறைவாக இருக்கும். ஏதேனும் ஒரு வகையில் இவர்களுக்கு தொடர்ந்து முன்னேற்றங்கள் வந்து சேரும்.

இந்த யோகம் பெற வளர்பிறை சந்திரன் ஆக இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.  குறிப்பாக சந்திரனின் வலிமை என்பது வளர்பிறை பஞ்சமியில் தொடங்கி தேய்பிறை பஞ்சமி வரை ஒளி பொருந்திய கிரகமாக இருப்பார்.

இந்த இடங்களில் பாவ கிரங்களின் சேர்க்கை அல்லது பார்வை ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும். சந்திரன் அதித ஒளி பொருந்திய நிலையில் அமையப்பெற்ற காலத்தில் இந்த யோகம் அமைந்தால், அற்புதமான பலன்களை பெற முடியும். பதவி, புகழ், முன்னேற்றம், வெற்றி வாகை சூடும் வாய்ப்புகள், கல்வியால் உயர்நிலை உள்ளிட்டவை சந்திர அதி யோகம் மூலம் கிடைக்கும்.

விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நயன்தாராவிற்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன.