செம டேஸ்ட்டான முந்திரி பக்கோடா.. ஈசியா செய்யலாம்.. நீங்களும் ட்ரை பண்ணுங்க!

By Pandeeswari Gurusamy
May 07, 2025

Hindustan Times
Tamil

வித விதமான பக்கோடா இருந்தாலும  அதில் டாப் என்றால் முந்திரி பக்கோடா தான்.. வேண்டுமா.. உங்களுக்கு.. வாங்க செய்து விடலாம்.

தேவையான பொருட்கள் : முந்திரி பருப்பு ஒரு கப், கடலை மாவு ஒரு கப், அரிசி மாவு மூன்று டீஸ்பூன், மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன் சிறிதளவு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய், வெங்காயம் இரண்டு, இஞ்சி பூண்டு கலவை ஒரு ஸ்பூன், கறி வேப்பிலை புதினா ஒரு கைப்பிடி தேவையான அளவு எண்ணெய் மற்றும் உப்பு

முந்திரி பருப்பை இரண்டாக உடைத்தாலும் சரி... முழுதாய் வைத்துக் கொண்டாலும் சரி தான்

கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், இஞ்சி பூண்டு விழுது, புதினா, கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு எல்லாவற்றையும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு போல பிசைந்து கொள்ளவும்.

தயாரித்து எடுத்த மாவு கலவையுடன் உடைத்த அல்லது உடைக்காத‌ முந்திரி பருப்பை கலந்து மாவோடு நன்றாக பிரட்டி கலக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி பருப்பு கலவையை போட்டு பொரித்து எடுக்கவும்

பிறகென்ன... எல்லோரும் விரும்பி சாப்பிடும் முந்திரி பக்கோடாவை எல்லோருக்கும் பரிமாறுங்கள்.

ஒரு நாளைக்கு எத்தனை ஸ்பூன் சர்க்கரை சாப்பிடலாம் தெரியுமா.. நிபுணர்கள் விளக்கம்!