வீட்டில் வளர்க்கப்படும் செடிகளை பராமரிக்கவும் அதன் ஆயுளை நீடிக்கவும் கடைபிடிக்க வேண்டிய எளிய டிப்ஸ்களை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Feb 11, 2024

Hindustan Times
Tamil

வீட்டில் செடி வளரப்பது புத்துணர்ச்சியையும், இனிமையான அனுபவத்தையும் தரும்.  ஆனால் செடிகளை பராமரிப்பதும், அதன் ஆயுள் கெடாமல் பார்த்துக்கொள்வதும் சவாலான விஷயம். செடிகளை பராமரிக்கும் சில எளிய டிப்ஸ்களை தெரிந்து கொள்ளலாம்

தண்ணீர் ஊற்றுதல்

உங்களது செடிகளுக்கு தேவைப்படும் நேரத்தில் தவறாமல் நீர் பாய்ச்சுவதை உறுதி செய்ய வேண்டும். முதலில் செடி வளரும் மண்ணில் நீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் இலைகள், காம்புகளில் ஊற்ற வேண்டும். மண் வறட்சியாக இருந்தால் மட்டுமே நீர் பாய்ச்ச வேண்டும் அதிகமாக தண்ணீர் ஊற்றுவதை  தவிர்க்க வேண்டும் 

கத்தரித்தல்

உங்கள் செடிகள் நன்கு வளரவும், சரியான அமைப்பை பெறவும் தேவையில்லாத பகுதிகளை அவ்வப்போது கத்தரிக்க வேண்டும்.  குறிப்பாக முனை பகுதியை கத்தரிக்கவும்

செடிகளை சரியாக பொருத்துதல்

செடிகள் வளர்வதற்கு எது தேவையோ அதற்கு ஏற்றார் போல் அதை வைக்க வேண்டும். சில செடிகளுக்கு ஈரப்பதமிக்க இடங்களும், சிலவைகளுக்கு சூரிய ஒளி தேவைப்படும். அதேபோல் சில செடிகளுக்கு குறைவான ஒளி கூட தேவைப்படலாம்

சரியான தொட்டியை தேர்வு செய்தல்

செடி வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்க சரியான தொட்டியை தேர்வு செய்ய வேண்டும்.  ஏனென்றால் நீங்கள் வளர்க்கபோகும் செடியின் வளர்ச்சிக்கு ஏற்ப தொட்டியல் வைப்பதன் தடை ஏதும் ஏற்படுவதை  தவிர்க்கலாம்

இயற்கை உரங்களை பயன்படுத்துதல் 

ரசாயனம் கலந்த உரம் பயன்படுத்துவதன் மூலம் மண் பாதிப்படையை வாய்ப்பு உள்ளது. அதை தவிர்க்க இயற்கையான உரங்களை பயன்படுத்துவதன் மூலம் செடிகளின் வளர்ச்சியும் ஆரோக்கியமாக இருக்கும்

வெங்காயம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா!

Pexels