பாலைத் தவிர கால்சியம் சத்து நிறைந்துள்ள பொருட்கள்!

Pexels

By Pandeeswari Gurusamy
Apr 14, 2024

Hindustan Times
Tamil

வெண்டைக்காயையும் உங்கள் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்வது நல்லது. ஏனெனில் ஒரு கப் வெண்டைக்காயில் 88 மில்லிகிராம் கால்சியச்சத்து உள்ளது. மேலும் இதில் மற்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது.

Pexels

வேகவைத்த முட்டைகள் காலை உணவுக்கு மட்டும் உகந்ததல்ல. அவற்றில் கால்சியச்சத்தும் அதிகம் உள்ளது. வேகவைத்த முட்டை 100 கிராமில் 50 கிராம் கால்சியச் சத்து உள்ளது. இது எலும்பு ஆரோக்கியம் சிறக்க உதவுகிறது.

Pexels

ப்ரோகோலி, பச்சை காய்கறி வகைகளுள் ஒன்று. 100 கிராம் ப்ரோகோலியில் 47 மில்லிகிராம் கால்சியச் சத்து உள்ளது. ப்ரோகோலியை எந்த உணவில் வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். காளிஃப்ளவர் போலவே தோற்றமளிப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக ப்ரோகோலி உள்ளது.

Pexels

பெரும்பாலும் கீரைகள் இரும்புச்சத்துக்கள் நிறைந்தவை. கீரைகளை இரும்புச்சத்துக்காக மட்டுமின்றி கால்சிய சத்துக்களுக்காகவும் நாம் அதிகம் எடுத்துக்கொள்ளலாம். 100 கிராம் கீரையில் 99 கிராம் கால்சியச் சத்து உள்ளது. உங்கள் உணவில் கீரையை சேர்த்து உங்கள் எலும்புகளை இரும்பாக்குங்கள்.

Pexels

ராஜ்மாவில், புரதச்சத்துக்கள் மட்டும் அதிகம் கிடையாது, இதில் நார்ச்சத்துக்களும், கால்சியமும் அதிகம் உள்ளது. 100 கிராம் ராஜ்மாவில், 143 மில்லிகிராம், கால்சியச் சத்து உள்ளது. எனவே எலும்பு ஆரோக்கியத்துக்கு இது ஒரு சிறந்த உணவாகும்.

Pexels

பாதாம் கால்சியமும் நிறைந்தவை. 30 கிராம் பாதாமில், 80 கிராம் கால்சியச் சத்து உள்ளது. இது எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது.

Pexels

ஆரஞ்சும் ஒரு புத்துணர்ச்சி தரும் ஸ்னாக்ஸ் மட்டுமல்ல, கால்சியம் அதிகம் எடுப்பதை அது ஊக்குவிக்கிறது. 100 கிராம் ஆரஞ்சில் 40 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. சாறு நிறைந்த ஆரஞ்சு பழங்கள் உங்கள் எலும்புகளை இரும்பாக்குகின்றன.

Pexels

சியா விதையில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் கால்சியமும் உள்ளது. 100 கிராம் சியா விதையில் 631 கிராம் கால்சியச்சத்து உள்ளது. இதை உங்கள் உணவில் சேர்த்துக்கொண்டால் உங்கள் எலும்பு ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

pixa bay

சோயா பீன்ஸ்   கால்சியம் சத்து அதிகம் உள்ள ஒரு உணவுப்பொருள் ஆகும். 100 கிராம் சோயாவில் 277 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. பால் பொருட்களை தவிர்த்து எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு சோயா பீன்ஸ் ஒரு சிறந்த தேர்வு.

Pexels

 ’மேஷம் முதல் மீனம் வரை!’ புதன் கிரகம் நீசம் அடைவதால் வாழ்வில் ஏற்படும் நன்மை, தீமைகள்!