வாயில் வைத்ததும் கரையும் தித்திக்கும் மக்கானா பர்ஃபி.. இனி வீட்டிலேயே செய்யலாம்!
Canva
By Pandeeswari Gurusamy Mar 31, 2025
Hindustan Times Tamil
தேவையான பொருட்கள் : ஒரு கப் மக்கானா, அரை கப் முந்திரி, 4 முதல் 5 தேக்கரண்டி நெய், 2 தேக்கரண்டி துருவிய தேங்காய், ஏலக்காய் தூள் அரை தேக்கரண்டி, ஒரு கப் பால், ஒரு கப் பனை வெல்லம், 3-4 தேக்கரண்டி பொடியாக நறுக்கிய பிஸ்தா பருப்புகள்
Canva
பர்ஃபி செய்ய, முதலில் ஒரு கடாயில் நெய்யை ஊற்றி மக்கானாவை நன்கு வறுக்கவும். தாமரை விதைகள் மொறுமொறுப்பாக மாறியதும், அவற்றை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
Canva
இதற்குப் பிறகு, அதே வாணலியில் சிறிது நெய்யைச் சேர்த்து, முந்திரி பருப்பையும் வறுக்கவும்
Pixabay
இரண்டும் ஆறியதும், அரைத்து நன்றாகப் பொடி செய்து கொள்ளவும். இப்போது வாணலியில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
Pixabay
கொதித்த பிறகு, தயாரிக்கப்பட்ட மக்கானா மற்றும் முந்திரி பொடியை அதில் சேர்க்கவும்.
Pixabay
பின்னர் எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும். சிறிது நேரத்திற்குள், மக்கானா பவுடரும் பாலும் கலந்த கெட்டியான கலவை தயாராகிவிடும்.
Pixabay
இப்போது சுவைக்கேற்ப சிறிது சர்க்கரையைச் சேர்த்து, நன்கு கலந்து மென்மையான மாவைத் தயாரிக்கவும்.
Canva
ஒரு தட்டில் நெய் தடவி, தயாரிக்கப்பட்ட கலவையை அதில் பரப்பவும். பிஸ்தா மற்றும் குங்குமப்பூ வைத்து அலங்கரிக்கலாம்.
Canva
சிறிது நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். பின்னர் அதை எடுத்து பர்ஃபி வடிவத்தில் வெட்டவும். அவ்வளவுதான் ருசியான மக்கானா பார்பி ரெடி.
Canva
ஆரோக்கியமான செரிமானத்திற்கு இந்த 9 காலை பழக்கங்களைப் பின்பற்றுங்கள்.