இந்த பிரச்சனை இருக்கா.. கத்தரிக்காய் சாப்பிடாதீங்க!

pixa bay

By Pandeeswari Gurusamy
May 24, 2024

Hindustan Times
Tamil

கத்தரிக்காய் பெரும்பாலானோரின் விருப்ப உணவாக உள்ளது. இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆன்டிஆக்ஸ்டன்ட்கள் நிறைந்துள்ளது. இது உடலை பல பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது.

pixabay

புற்றுநோய், இதய நோய் போன்ற நீண்ட கால நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

pixa bay

ஆனாலும் சில உடல் நல பிரச்சனை உள்ளவர்கள் கத்தரிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அது குறித்து இங்கு பார்க்கலாம்.

pixa bay

செரிமானம்: உங்களுக்கு செரிமானத்தில் பிரச்சனை இருந்தால் கத்திரிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் கத்தரிக்காய் உங்கள் செரிமானத்தை மோசமாக்குகிறது, மேலும் வாயு பிரச்னையை தூண்டும்.

pixa bay

தோல் எரிச்சல் மற்றும் அரிப்பு இருந்தால் கத்திரிக்காய் தவிர்க்க வேண்டும். இந்த பிரச்னை இருந்தால் பொதுவாக, கத்தரிக்காயை சாப்பிட வேண்டாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். தோல் ஒவ்வாமை இருந்தாலும். இது உங்கள் பிரச்னையின் தீவிரத்தை அதிகரிக்கக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள்.

pixa bay

மனச்சோர்வு அல்லது பதட்டம், மன அழுத்தம் காரணமாக நீங்கள் மனச்சோர்வு மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் கத்திரிக்காய் சாப்பிடவேண்டாம்.  கத்தரிக்காய் உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும். இது மாத்திரையின் வீரியத்தையும் குறைக்க வாய்ப்பு உள்ளது. 

pixa bay

சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் கத்தரிக்காயை தவிர்க்க வேண்டும். கத்தரிக்காயில் உள்ள ஆக்சலேட்டுகள் உங்கள் கல் பிரச்சனையை மேலும் மோசமாக்கும் தன்மை கொண்டது.

pixa bay

’மேஷம் முதல் மீனம் வரை!’ புகழை கொடுக்கும் செலிபிரட்டி ஆக்கும் சுப வேசி யோகம் யாருக்கு?