மூளையில் அசாதாரணமாக செல்கள் வளரும்போது ஏற்படும் ஒரு நிலை பிரெயின் ட்யூமர் என்று அழைக்கப்படுகிறது. மூளையில் கட்டி என்று அழைக்கப்படும் இந்த நோய் பாதிப்பின் அறிகுறிகள் பற்றி பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman Jun 09, 2025
Hindustan Times Tamil
மூளையில் கட்டி என்பது மூளையை சுற்றி வளரும் அசாதரண கட்டி என்றாலும் இவை புற்றுநோய் கட்டிகள் கிடையாது என கூறப்படுகிறது
அடிக்கடி தலைவலி, குறிப்பாக அதிகாலையிலோ அல்லது படுத்து இருக்கும்போது வலி ஏற்படுவத மூளையில் கட்டி இருப்பதற்கான அறிகுறியாகும்
மயக்கம் ஏற்படுவது போல் உணர்வது, எந்த காரணமும் இல்லாமல் சோர்வாக இருப்பது உங்கள் மூளை செயல்பாட்டில் தவறு இருப்பதை உணர்த்தும் அறிகுறி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
காலை நேரத்தில் குமட்டல், வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்படுவதும் மூளையில் நிகழும் அதிகரித்த அழுத்தம் காரணமாக ஏற்படலாம்
மங்களான பார்வை அல்லது இரட்டை பார்வை, சில சமயங்களில் புற பார்வை இழப்பது போன்றவற்றுக்கு மூளையில் இருக்கும் கட்டி காரணமாக இருக்கலாம். கண் நரம்புகளில் கட்டிகளால் ஏற்படும் அழுத்தம் காரணமாக இவை நிகழலாம்
உடலில் ஒரு பகுதியில் உணர்ச்சி இல்லாமலோ, செயல்பாடு இல்லாமலோ இருந்தால் மூளையில் இருக்கும் கட்டி காரணமாக மூளை இந்த செயல்பாட்டை தடுக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
பேசும் வார்த்தைகள் தடுமாற்றம், உளறல் பேச்சு அல்லது புரிந்து கொள்வதில் சிரமம் போன்றவை மூளையில் கட்டி இருப்பதற்கான எச்சரிக்கை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
ஞாபக மறதி, குழப்பம், புரிந்துகொள்வதில் சிரமம் போன்றவை போதிய தூக்கமின்மை போன்றவை மூளையில் கட்டி இருப்பதற்கான அறிகுறியாகும்
இதற்கு முன்பு ஒருபோதும் இல்லாத ஒருவருக்கு திடீர் வலிப்பு அல்லது விரைவான தன்னிச்சையான தசைச் சுருக்கங்கள் ஏற்படுவது ஆபத்தானது. இந்த அறிகுறிகளைக் கொண்ட ஒருவருக்கு அவசர மருத்துவ உதவி தேவை
வெற்றிகரமான நபர்கள் நேரத்தை மிகவும் திறம்பட பயன்படுத்தும் வழிகள் இதோ!