Bra : பொதுவாக பெண்கள் குர்தா பைஜாமா அல்லது புடவை என எந்த உடையை அணிந்திருந்தாலும், தங்களை அழகாகவும், நேர்த்தியாகவும் காட்டி கொள்ள பிரா அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவை மார்பகங்களுக்கு ஒரு சிறந்த ஆதரவையும் எடுப்பான தோற்றத்தையும் தருகிறது. அவை உங்களை அழகாக காட்டுவது மட்டுமின்றி மார்பகங்களின் ஆரோக்கியத்தையும் பராமரிக்கின்றன. ஆனால் சிலருக்கு பேட் செய்யப்பட்ட பிரா தேவையா? அல்லது சாதாரண பிராவை பயன்படுத்துவதா? என்பது போன்ற சந்தேகம் உள்ளது.
Pexels
பேட் இல்லாத பிராவுக்கும் பேட் உள்ள ப்ரா இரண்டுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா.. பேட் வைத்து வடிவமைக்கப்பட்ட ப்ரா என்றால் தடிமனான கப்கள் ப்ராவிற்குள் வைக்கப்பட்டுள்ளன. இவை அணிவது மிகவும் எளிது. பேட் இல்லாத பிராவை விட, பேட் செய்யப்பட்ட ப்ரா மார்பகங்களுக்கு சிறந்த ஆதரவையும் எடுப்பான தோற்றத்தையும் வழங்குகிறது. நவீன காலத்தில் பெண் குழந்தைகளுக்கு கிடைக்கும் சிறந்த தயாரிப்பு என்றே சொல்ல வேண்டும். இந்த பிரா மார்பகங்களுக்கு முழுமையான வடிவத்தை அளிக்கிறது. அமைப்பை வட்டமாக பார்க்க வைக்கிறது.
Pexels
ஒரு பேட் செய்யப்பட்ட ப்ராவில் இலகுரக பட்டைகள் பயன்படுத்தப்படுகிறது. அதனால் அதிக எடை இல்லை. மேலும், அவை மென்மையாகவும் இருக்கும். சிறிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள் மட்டுமே அவற்றை அணிவார்கள் என்று பலர் நினைக்கிறார்கள். உண்மையில் இவை மார்பகங்களின் அளவைப் பொருட்படுத்தாமல் எந்த பெண்கள் வேண்டுமானாலும் அணியலாம்.
Pexels
பொதுவாக பெண்களை பொறுத்த மட்டில் பிரா அழகு, நம்பிக்கையை அதிகரிக்கும். ஒரு பெண் தன் தோற்றத்தை எந்த அளவுக்கு மேம்படுத்துகிறாளோ, அந்த அளவுக்கு அவளிடம் தன்னம்பிக்கை இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பேட் செய்யப்பட்ட பிரா அணிவதால் உடல் அழகாக இருக்கும். இது உங்கள் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும். இது மிகவும் வசதியானது. வழக்கமான ப்ராக்கள் மெல்லியதாக இருக்கும். இவை அதிக வசதியை தருவதில்லை. பேட் பிராக்கள் மார்பகங்களின் எடையைத் தாங்கும். எனவே ஆதரவு மட்டுமல்ல, மார்பளவு கவர்ச்சிகரமானதாக தோன்றுகிறது.
Pexels
மார்புப் பகுதியில் அழகான வடிவத்தை விரும்புபவர்கள் பேட் செய்யப்பட்ட பிராவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதேபோல் தனியாக தேவையான நேரங்களில் மட்டும் வைத்துக் கொள்ள வசதியாக தனிப்பட்ட பேடுகளும் சந்தையில் கிடைக்கின்றன. சிறிய மார்பகங்களைக் கொண்ட பெண்களும் பேட் செய்யப்பட்ட பிரா அணிந்தால், பிரச்சனை தீரும். டி-ஷர்ட், பிளவுஸ், குர்தா என எதை அணிந்தாலும் பேட்டட் பிரா அணிந்தால் அழகாக இருக்கும். இவற்றை முயற்சிக்கவும்.
Pexels
ஒரு பேட் செய்யப்பட்ட பிரா உங்கள் அலமாரியில் கண்டிப்பாக இருக்க வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில் தான் பெண்களுக்கு உள்ளாடை போல் பிரா அணிகின்றனரா என்றால் இல்லை. நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பெண்கள் பிரா அணிந்து வந்ததற்கான சான்றுகள் உள்ளன. கிரேக்க-ரோமன் காலத்தில் பெண்கள் பிரா அணிந்திருப்பதை வரலாற்றாசிரியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Pexels
எகிப்தியப் பெண்கள் தோலால் செய்யப்பட்ட பிரா அணிந்திருந்ததாகத் தெரிகிறது. நவீன ப்ராக்களின் வரலாற்றைப் பொறுத்தவரை, அவை பிரான்சில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு அனைத்து நாடுகளிலும் பிரா உற்பத்தி தொடங்கியுள்ளது. பெண்களும் இவற்றை அணிவதன் சுகத்தைப் புரிந்துகொள்கிறார்கள். இருப்பினும், இரவில் பெண்கள் அதிக இறுக்கமான உள்ளாடைகளை அகற்றுவது இரத்த ஓட்டத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தடுக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
Pexels
இந்திய அணி 297 ரன்கள் குவித்து வங்கதேசத்துக்கு எதிரான கடைசி டி20 மேட்ச்சில் அசத்தியது.