உயர் ரத்த அழுத்தம் அல்லது ஹைப்பர்டென்சன் உலகளவில் பல மில்லியன் பேர்களை பாதிக்கிறது. பரவலாக இது ஆரோக்கிய கவனம் பெற்றுவருகிறது. இந்தியாவில் மட்டும் 220 மில்லியன் மக்கள் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கிட்டத்தட்ட 12 சதவீதம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. 

pixa bay

By Pandeeswari Gurusamy
Jan 24, 2024

Hindustan Times
Tamil

இந்த பிரச்னைதகள் மாரடைப்புகள், பக்கவாதங்கள் மற்றும் சிறுநீரக கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது. ஆனால் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க நம்மால் முடியும். இதனால் நம் இதய ஆரோக்கியத்தையும் பேணலாம்.

pixa bay

உங்கள் தட்டைவிட ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம் ஒன்று இல்லை. அது உங்கள் உயர் ரத்த அழுத்ததை எதிர்த்து போராடுகிறது. காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், புரதச்சத்து உணவுகள் என உங்கள் உணவை தேர்ந்தெடுங்கள். உங்கள் உப்பு உபயோகத்தில் கட்டாயம் ஒரு கண் வையுங்கள்.

pixa bay

அதிகளவில் சோடியம் உள்ளே செல்லும்போதும் ரத்த அழுத்தம் உயரும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து, ஃபிரஷாக கிடைக்கும் உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். மூலிகைகளை சுவை பார்க்காமல் உங்கள் இதய ஆரோக்கியத்துக்கு நன்மை பயப்பதாக கருதி எடுத்துக்கொள்ளுங்கள்.

pixa bay

எப்போதாவது மது அருந்தி மகிழலாம். ஆனால் அதிகப்படியாக மது அருந்துவது உங்கள் ரத்த அழுத்தத்தை உயர்த்தும். எனவே குறைவானது முதல் மிதமானது வரை மது எடுத்துக்கொள்ளுங்கள். அந்த அளவை தாண்டி விடாதீர்கள். 

pixa bay

உடற்பயிற்சி என்பது கட்டாயமான ஒன்று. அது இதய ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. தினமும் உடற்பயிற்சி செய்வது உங்கள் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. ஆரோக்கிமான உடல் எடையை பராமரிக்க உதவுகிறது. 

pixa bay

நாள்பட்ட மனஅழுத்தம் ரத்த அழுத்தத்தை உயர்த்தும். அது மனஅழுத்தத்தை பராமரிப்பது இதய ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியம். உங்களை அமைதியாக வைத்திருக்கும் நுட்பங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஆழ்ந்து சுவாசிப்பது, தியானம், யோகா ஆகியவற்றை உங்கள் வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.

pixa bay

அதிக உடல் எடை இதயத்தில், அழுத்தத்தை கொடுக்கும். உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும். ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பதில் கவனம் செலுத்துங்கள். அதற்கு உங்களுக்கு சரிவிகித உணவு கட்டாயம் தேவை. 

pixa bay

சிலருக்கு வாழ்வியல் மாற்றங்கள் மற்றும் போதாது. மருந்தின் தேவையும் இருக்கும். எனவே மருதுதுவர் பரிந்துரைத்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். எனவே மருத்துவர் பரிந்துரைத்த அளவு மருந்தை பரிந்துரைத்த காலஅளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். 

pixa bay

Enter text Here

pixa bay

முறையான மருத்துவ பரிசோதனைகள், திறந்த உரையாடலை உங்கள் மருத்துவரிடம் செய்து உங்கள் பிரச்னைகளை விரிவாக எடுத்துக்கூறி, உங்கள் சிகிச்சை திட்டம் நன்றாக செயல்பட ஒத்துழைப்பு கொடுங்கள். உங்களின் குறிப்பிட்ட தேவைக்கும் நீங்கள் அறிவுரைகளை பெறவேண்டும்.

pixa bay

ப்ரீத்தி ஜிந்தா குறித்து சுவாரஸ்ய தகவல்கள்