Bhagyaraj: சென்னையில் அண்மையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் இயக்குநர் பாக்யராஜ், பாரதிராஜாவுடன் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து பேசினார்.

By Kalyani Pandiyan S
Mar 07, 2025

Hindustan Times
Tamil

அதில் அவர் பேசும் போது, ‘எங்களுடைய டைரக்டர் பாரதிராஜா சாருக்கு அவர் எழுதும் கதைகள் அனைத்தும் மனப்பாடமாக இருக்கும். அதனால் யார் வந்து கதைக் கேட்டாலும், அவர்தான் முழு கதையையும் சொல்வார்.

இந்த நிலையில் நான் அவரிடம், சார் நீங்கள் மிக நன்றாக கதை சொல்கிறீர்கள்; சப்பானி என்ற ஒரு அருமையான கதாபாத்திரத்தை எழுதி இருக்கிறீர்கள். ஆனால், அந்த கதாபாத்திரம் கொஞ்சம் விவரம் இல்லாத கதாபாத்திரம்.

அப்படி இருக்கும் பொழுது, அவர் இலகுவாக எல்லோரையும் போல பேசுவது எனக்கு சரியாக படவில்லை என்றேன். உடனே அவர் அதற்கு என்ன செய்யலாம் என்றார். உடனே நான் வாய்ஸ் மாடுலேஷனில் மாற்றம் செய்யலாம் என்று கூறினேன்.

உடனே அவர் எப்படி என்று கேட்டார். இந்த நிலையில்தான் தற்போது கமல் படத்தில் பேசி இருக்கும் மாடுலேஷனை பேசிக்காண்பித்தேன். அவருக்கு அது மிகவும் பிடித்து விட, முழு கதையையும் என்னிடம் சொல்லி, ஒவ்வொறு சீனிற்கும் மாடுலேஷன்களை பெற்றுக்கொண்டார்.

அந்த படத்திற்கு ராஜ்கிரண் சார் தான் தயாரிப்பாளர். அவருக்கு அதுதான் முதல் படமும் கூட.. அவருக்கு பைனான்ஸ் செய்ய ஜி டி என்பவர் முன் வந்தார். படத்திற்கான முழு பணத்தையும் அவர்தான் முதலீடாக போட இருந்தார்.

இந்த நிலையில் அவர் ஒரு முறை படத்தின் கதையைக் கேட்க வந்தார். அப்போது பாரதிராஜா சார், என்னை அழைத்து நீ கதை சொல் என்று சொல்லிவிட்டார். இதைக் கேட்ட ராஜ்கிரண் பதறிவிட்டார்

ஆனால், பாரதிராஜா சார், இல்லை இல்லை அவன் நன்றாக கதை சொல்வான் என்று சொல்லி, என்னை கதை சொல்ல வைத்தார். கதை சொல்லி முடித்த பிறகு ராஜ்கிரண் என்னை பாராட்டினார்.  All Images Photo credit (  Bhagyaraj Krishnaswamy Facebook and Instagram)

நெய் ஏன் பயன்படுத்த வேண்டும் தெரியுமா..! இந்த 6 காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

image credit to unsplash