ஆரோக்கியமான நல்வாழ்வுக்கு டயட், உடற்பயிற்சி, நல்ல தூக்கம் ஆகியவற்றுடன் சமையலுக்கு நாம் தேர்வு செய்யும் எண்ணெய் வகையும் முக்கிய பங்காற்றுகிறது

By Muthu Vinayagam Kosalairaman
May 24, 2024

Hindustan Times
Tamil

உடல் எடையை குறைக்கவும், கட்டுக்குள் வைக்கவும் விரும்புகிறவர்கள் சில எண்ணெய் வகைகளை தங்களது உணவில் சேர்த்து கொள்ளலாம்

சமையல் எண்ணெய் உடல் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், எடை குறைப்பிலும் தொடர்புடையதாக உள்ளது

உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்களிப்பை தரும் எண்ணெய் வகைகள் எவை என்பதை பார்க்கலாம்

ஆலிவ் எண்ணெய்யில் சமைக்கும் உணவுகள் வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது. இதனால் அதிகம் உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க செய்து எடை குறைப்புக்கு உதவுகிறது

தேங்காய் எண்ணெய்யில் ஆரோக்கியம் மிக்க நிறைவுற்ற கொழுப்புகள் உள்ளன. வயிற்று பகுதியில் இருக்கும் கொழுப்பை எரிக்க செய்வதன் மூலம் உடல் எடையை குறைக்க உதவுகிறது

ரைஸ் பிரான் எண்ணெய் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. கொல்ஸ்ட்ரால் அளவை குறைத்து, எடை குறைப்பை மேம்படுத்துகிறது

சுத்திகரிக்கப்படாத பாதாம் எண்ணெய் எடை குறைப்புக்கு ஆதரவு அளிக்கிறது. இதை வைத்து பேக்கிங் உணவுகள் தயார் செய்தால் பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்

கடுகு எண்ணெய் இருதய ஆரோக்கியத்துக்கு நன்மை தருவதுடன், எடை குறைப்புக்கும் உதவுகிறது 

’மேஷம் முதல் மீனம் வரை!’ புகழை கொடுக்கும் செலிபிரட்டி ஆக்கும் சுப வேசி யோகம் யாருக்கு?