கோதுமையில் இத்தனை விஷயம் இருக்கா?

pixa bay

By Pandeeswari Gurusamy
Jan 18, 2024

Hindustan Times
Tamil

கோதுமை, உங்கள் உடலில் நேர்மறையான பாதிப்புக்களை மட்டும்தான் ஏற்படுகிறது. இதில் செலினியம் உள்ளது. அது உடலுக்கு கேடு விளைவிக்கும் தொற்றுகளுக்கு எதிராக செயல்படும் முக்கியமான ஆன்டிஆக்ஸிடன்ட். தலைமுடி வறண்டுபோகாமல் தடுக்கிறது

pixa bay

நார்ச்சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்வது, உடல் எடை குறைவதற்கும், உடல் பருமன் ஆபத்தையும் குறைக்கிறது. கோதுமை உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கிறது. ஒருவர் மூன்று வேளையும் கோதுமை உணவுகளை எடுத்துக்கொண்டால், அவரது உடல் எடை சரியாக பராமரிக்கப்படுகிறது.

pixa bay

கோதுமையில் வைட்டமின்கள், நார்ச்சத்து, மெக்னீசியம், சிங்க மற்றும் புரதச்சத்துக்கள் நிறைந்தது. இது வைட்டமின் பி சத்து நிறைந்தது. இதில் நிறைய சிங்க, இரும்பு, மெக்னீசியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற மினரல்கள் நிறைந்துள்ளது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளன.

pixa bay

அழற்சியால் அவதியுறுபவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக உள்ளது. அழற்சி பல நீண்ட நாள் வியாதிகளுக்கு காரணமாகிறது. கோதுமை பயன்படுத்துவதால், அழற்சி குறைகிறது. உங்கள் உணவில் கோதுமையை சேர்த்துக்கொள்வது அழற்சியை குறைக்க உதவுகிறது. நாள்பட்ட நோய்கள் வரும் ஆபத்தையும் குறைக்கிறது.

pixa bay

மூளையில் அழற்சியை அகற்ற வைட்டமின் பி சத்துக்கள் நமது உணவில் கட்டாயம் இருக்க வேண்டும். நினைவாற்றல் தொடர்பான நோய்களை குணப்படுத்துவதற்கு வைட்டமின் இ உதவுகிறது.

pixa bay

இதயநோய் ஏற்படும் ஆபத்தை கோதுமை எடுத்துக்கொள்வது தடுக்கிறது. இதய ஆரோக்கியத்துக்கு நாளில் 3 வேளையும் கோதுமை எடுத்துக்கொள்வது நல்லது என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்க கோதுமை சிறந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

pixa bay

சரும புற்றுநோய் ஏற்படாமல் இருக்க உங்கள் உணவில் கோதுமையை கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் உள்ள செலினியம் சரும புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது. இது சரும ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. சருமத்தை பளபளப்பாக்குகிறது. பெருங்குடல் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது.

pixa bay

சரும புற்றுநோய் ஏற்படாமல் இருக்க உங்கள் உணவில் கோதுமையை கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் உள்ள செலினியம் சரும புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது. இது சரும ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. சருமத்தை பளபளப்பாக்குகிறது. பெருங்குடல் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது.

pixa bay

30 வயது அடைந்துவிட்டால் உடலுக்கு தேவையான அடிப்படை ஊட்டச்சத்துகள் எவை என்பதை பார்க்கலாம்