Benefits of Walking : சாப்பிட்டவுடன் 10 நிமிடம் நடப்பதால் கிடைக்கும் பலன்கள்! 

pixa bay

By Pandeeswari Gurusamy
May 22, 2024

Hindustan Times
Tamil

சாப்பிட்டவுடன் 10 நிமிடம் நடப்பதை அனைத்து ஊட்டச்சத்து நிபுணர்களும், மருத்துவர்களும் பரிந்துரைக்கிறார்கள். மாறாக அமரவோ அல்லது படுக்கவோ கூடாது. இந்தப்பழக்கம் செரிமானம், ரத்த சர்க்கரை அளவுகளில் பிரச்சனையை ஏற்படுத்தும். உங்களின் மனநிலையை மாற்றும். சாப்பிட்டவுடன் 10 நிமிடங்கள் நடப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

pixa bay

நீங்கள் சாப்பிட்டவுடன், வேகமாக நடக்கக்கூடாது. மெதுவாக நடந்து செல்லவேண்டும். சிறுசிறு அடிகளாக எடுத்துவைத்து நடக்கவேண்டும். உங்களை வற்புறுத்தி நடக்கக்கூடாது. அருகில் உள்ள பார்க்கில் ஒரு 10 நிமிடங்கள் நடந்துவிட்டு வரவேண்டும்.

pixa bay

சாப்பாட்டுக்குப்பின் சிறிது தூரம் நடப்பது, உங்களின் செரிமான மண்டலத்துக்கு நல்லது. நீங்கள் உண்ட உணவை நன்றாக உடைத்து, செரிமானத்தை அதிகரிக்க உதவுகிறது. இதனால் வயிறு உப்புசம், வாயுத்தொல்லை மற்றும் மலச்சிக்கல் போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது.

pixa bay

சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு சிறிய நடை, இன்சுலின் சென்சிடிவிட்டியால் ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு குறிப்பாக பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது.

pixa bay

தினசரி கலோரிகளை பராமரிக்க அல்லது எடையை குறைக்க உதவுவதற்காக சாப்பாட்டுக்கு முன்னர், வழக்கமான நடை தேவை. இந்த உடற்பயிற்சி, கொழுப்பு சேர்வதை தடுக்க உதவுகிறது.

pixa bay

ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதயத்தை பலப்படுத்துகிறது. இதய நோய்கள் ஏற்படுத்தும் ஆபத்தை குறைக்கிறது. ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. கொழுப்பு அளவை குறைக்கிறது.

pixa bay

உடற்பயிற்சி, எண்டோர்ஃபில்களை வெளியிடவும், மனஅழுத்ததைக் குறைத்து, மனநிலையை அதிகரிக்கிறது. இது மன ஆரோக்கியத்தை நன்றாக்கவும், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.

pixa bay

உடலின் வளர்சிதையை அதிகரிக்க உதவுகிறது. உடலில் தேவையற்ற கலோரிகளை குறைக்க உதவுகிறது. இது உடலின் ஒட்டுமொத்த ஆற்றல் அளவை அதிகரிக்கிறது. உடல் எடையை பராமரிக்க உதவுகிறது.

pixa bay

நடைபயிற்சியால், வயிறில் உருவாகும் அமிலங்கள் குறைகிறது. இதனால் வாயு தொடர்பான நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இது அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சல் போன்றவற்றை தடுக்க உதவுகிறது.

சாப்பிட்டு முடித்தவுடன், மிதமான உடற்பயிற்சிகள், உறக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. இது உங்கள் உடலின் உறக்கம் – விழிப்பு சுழற்சியை முறைப்படுத்துகிறது. செரிமானத்தை அதிகரிக்கிறது மற்றும் மனஅழுத்ததை குறைக்கிறது. ஆழ்ந்த உறக்கத்தை ஏற்படுத்துகிறது.

சாப்பிட்டவுடன் ஏற்படும் சோர்வை போக்கி நடப்பது உங்களுக்கு ஆற்றலைக் கொடுக்கிறது. இதனால் உங்களின் மனம் தெளிவடைகிறது. உங்களின் கவனத்தை அதிகரிக்கிறது. சோர்வு போன்ற உணர்வை குறைக்கிறது.

pixa bay

’மேஷம் முதல் மீனம் வரை!’ புகழை கொடுக்கும் செலிபிரட்டி ஆக்கும் சுப வேசி யோகம் யாருக்கு?