‘பெண்களால் யோகம் யாருக்கு? உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் எங்கு உள்ளது!’ இதோ முழு விவரம்!

By Kathiravan V
Apr 12, 2024

Hindustan Times
Tamil

களத்திரகாரகனான சுக்கிரன் ரிஷபம் ராசிக்கும், துலாம் ராசிக்கும் அதிபதி ஆவார். களத்திரம் என்பதற்கு நேர் எதிர் என்று பொருள். ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால்தான் நல்ல மனைவி, நல்ல இல்வாழ்கை, வீடு, வாகன வசதி ஆகியவை கிடைக்கும். அசுர குரு என்று அழைக்கப்படும் சுக்கிரன், குரு பகவானுக்கு அடுத்த நிலையில் உள்ள சுபராக உள்ளார்.

ஒருவருக்கு லக்னத்தில் சுக்கிரன் இருந்தால் அவர் மிக அழகான தோற்றம் உடையாவராக இருப்பார். கணவனாக இருந்தால் மனைவி இடமும், மனைவியாக இருந்தால் கணவன் இடமும் நேசம் அதிகமாக இருக்கும். கலை ஆர்வமும், கணித ஆர்வமும் நன்றாக இருக்கும். 

சுக்கிரன் 2ஆம் வீட்டில் இருந்தால் நல்ல மனைவி அமையும், இருந்தாலும் பிற பெண்களின் மீது ஜாதகருக்கு கவனம் செல்லும். கவரும் வகையிலான பேச்சாற்றல், படித்தவர் போன்ற தோற்றம் உள்ளிட்டவை இவர்களுக்கு இருக்கும். இவர்களின் குடும்பத்தின் மீது தனி கவனம் செலுத்துவார்கள்.

3ஆம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் வரும் கணவனோ அல்லது மனைவியோ மாற்றுக் கருத்துக்களை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களில் ஒரு சிலருக்கு முன் கோபம் அதிகமாக இருக்கும்.

4ஆம் வீட்டில் சுக்கிரன் இருப்பது சிறப்பான பலன்களை தரும், இதனால் ஜாதகர் திக் பலத்தை பெறுவார்.  இவர்களுக்கு சொந்த வீடு கட்டும் வாய்ப்பும், சுகமான வாழ்கை, நீண்ட ஆயுள் உள்ளிட்டவை கிடைக்கும்.  பிற பெண்கள் மீதான மோகமும் இவர்களுக்கு இருக்கும். நினைக்கும் வாகனத்தை வாங்கும் வாய்ப்புகளும், சொகுசு வாழ்கையும் கிடைக்கும்.

5ஆம் வீட்டில் சுக்கிரன் இருந்தால், மகாலட்சுமியின் அம்சம் இருப்பதால் அதிக பெண் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு உண்டு. 5இல் சுக்கிரன் இருந்தால் அதிர்ஷ்டசாலி என்று சொல்வார்கள், இவர்களுக்கு கடவுள் ஆசி அதிகமாக உண்டு. உல்லாச பிரியர்களான இவர்களுக்கு பூர்வீக சொத்துக்கள் கண்டிப்பாக கிடைக்கும். இவர்கள் செயல்படும் துறைகளில் பாண்டித்யம் பெற்ற நபராக உருவெடுப்பார்கள்.

6ஆம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் மறைமுக எதிரிகள் அமைய அதிக வாய்ப்புகள் உண்டு. இவர்களுக்கு தாம்பத்திய சுகம் மீது நாட்டம் சற்று குறைவாக இருக்கும். விளையாட்டில் அதீக ஆர்வம் கொண்டவர்களாக இருவர்கள் விளங்குவர். ஆணாக இருந்தால் பெண்ணிடமோ அல்லது பெண்ணாக இருந்தால் ஆணிடமுமோ வெறுப்புகளை சந்திக்க நேரும் நிலை உண்டாகும்.

‘பெண்களால் யோகம் யாருக்கு? உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் எங்கு உள்ளது!’ இதோ முழு விவரம்!

7ஆம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் அழகான மனைவி அமையும், பகைவரால் கூட நன்மை ஏற்படும். இவர்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் தொடர்பு இருக்க வாய்ப்பு உண்டு.

8ஆம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் செல்வந்தர் ஆக அதிக வாய்ப்புகள் உண்டு. ஆனால் கணவன், மனைவி உறவில் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.

‘பெண்களால் யோகம் யாருக்கு? உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் எங்கு உள்ளது!’ இதோ முழு விவரம்!

9ஆம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் மாபெரும் பாக்கியசாலியாக இருப்பார்கள். பெண் வர்க்கத்தால் நிறைய செல்வம் இவர்களுக்கு கிடைக்கும். குறிப்பாக மனைவியால் செல்வ பலம் கூடும். கலை ஆர்வம் அதிகமாக இருக்கும். இவர்கள் வியாபாரம் செய்தால் பெரிய வெற்றி அடைவார்கள்.

10ஆம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் வாகன யோகம் உண்டாகும். திருமணத்திற்கு பிறகு வாழ்கை நன்றாக இருக்கும். கால்நடை மற்றும் உணவு, சினிமா, நாடகம் சார்ந்த தொழில்களில் சிறந்து விளங்க வாய்ப்பு உண்டு.

11ஆம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் தர்ம எண்ணங்கள் உண்டாகும். நல்ல வாழ்கை துணை அமையும். அஷ்ட ஐஸ்வரியம் கிடைக்கும். எந்த தொழில் செய்தாலும் வெற்றி கிடைக்கும்.

12ஆம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் ராஜபோக வாழ்கை கிடைக்கும். அழகிய ஆடை, அணிகலன்களை அணியும் நிலை உண்டாகும். செல்வ செழிப்பு இவர்களுக்கு அதிகம் இருக்கும். இவர்களுக்கு தாம்பத்யம் தாமதமாக கிடையாதலும் சுகமாதாக அமையும்.

மழை சீசனில் தவிர்க்க வேண்டிய உணவுகள்