Benefits of Peanuts: ஆண்களுக்கு வீரியத்தை அதிகரிப்பது முதல் நிலக்கடலையால் எத்தனை நன்மைகள் இருக்கு பாருங்க!

Pexels

By Pandeeswari Gurusamy
Apr 01, 2024

Hindustan Times
Tamil

பெண் கருவுருவதற்கும் ஆண்களுக்கு வீரியத்தைத் தருவதற்கும், உடல் பருமனைக் குறைப்பதற்கும் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் தரும் ஆற்றல் நிலக்கடலையில் நிரம்பியுள்ளது.

Pexels

100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன்சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது. இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும்கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

Pexels

நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம்விரைவாக நடக்கிறது. எனவே நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்ப்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்ப்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.

Pexels

நீரழிவு நோயை தடுக்கும்: நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது.

Pexels

பித்தப்பை கல்லைக் கரைக்கும்: நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டுவந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

Pexels

இதயம் காக்கும்: நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். அது உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆன்டி ஆக்சிடெண்டாக திகழ்கிறது.

Pexels

இளமையை பராமரிக்கும்: இளமையை பராமரிக்க நிலக்கடலை பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆன்டி ஆக்சிடெண்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

Pexels

ஞாபக சக்தி அதிகரிக்கும்: நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

Pexels

மன அழுத்தம் போக்கும்: நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம்நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட்டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்துசாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.

Pexels

கொழுப்பை குறைக்கும்: இப்படிச் சொல்வதைக் கேட்டு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான்உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்றுநம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது.

Pexels

தலைமுடியை ஆரோக்கியமாக வைக்க உதவும் ஜூஸ்கள் எவை என்பதை பார்க்கலாம்