Benefits of Orange Peels : ஆரஞ்சு பழ தோலில் எத்தனை நன்மைகள் தெரியுமா?

Pexels

By Pandeeswari Gurusamy
May 13, 2024

Hindustan Times
Tamil

ஆரஞ்சு பழ  தோலில் கசப்பும், துவர்ப்பும் கலந்து இருக்கும். இந்த தோல் உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்குமே சிறந்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆரஞ்சு பழத்தோல்களில் ஒளிந்துள்ள நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

Pexels

ஆரஞ்சு பழத்தோலில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. அதன் சுளைகளைவிட அதிகளவிலான வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தோலில்தான் உள்ளது. உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், சளியை எதிர்த்து போராடவும், உங்கள் சருமத்தை பளபளப்பாக்கவும் ஆரஞ்சு பழத்தோல்கள் உள்ளது.

Pexels

ஆரஞ்சு பழத்தோலில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது வயிற்றுக்கு நல்லது. இது செரிமானத்து உதவி, மலச்சிக்கலை தடுக்கிறது. வயிறு வலியை போக்குகிறது. வயிற்றில் ஏற்படும் அசவுகர்யங்களை நீக்குகிறது. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. குடலில் நல்ல பாக்டீரியாக்களை தங்க வைக்கிறது.

Pexels

உடல் எடையை குறைக்க உதவும் உட்பொருட்களையும் கொண்டது ஆரஞ்சு பழத்தோல்கள். உடல் எடை மேலாண்மையில் உதவுகிறது. இவை கொழுப்பை எரிப்பதற்கு உதவுகின்றன. கொழுப்பு அளவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உங்கள் உடல் ஆரோக்கியமான எடையை எட்டுவதற்கு உதவுகிறது.

Pexels

ஆரஞ்சு பழத்தோலில் உள்ள உட்பொருட்கள் உங்களின் மனநிலையை மாற்றி, மனஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இது மினி அரோமாதெரபி எடுத்த உணர்வைக்கொடுக்கிறது. உங்கள் கால் மற்றும் கைகளின் விரல்களின் இடையில் ஆரஞ்சு பழத்தோல்களை வைத்து தடவினாலே போதும். உங்கள் மனதை அமைதிப்படுத்துகிறது.

Pexels

கடுமையான கெமிக்கல்களுக்கு விடைகொடுங்கள். ஆரஞ்சுப்பழத்தோலில் உள்ள எண்ணெய், சுத்தம் செய்வதற்கு மிகவும் ஏற்றது. இதை வினிகரில் கலந்து, நேரடியாக உபயோகப்படுத்துங்கள். அது உங்கள் வீட்டில் உள்ள கரைகளைப்போக்கும், உங்கள் இல்லத்துக்கும் நறுமணத்தைத்தரும்.

Pexels

ஆரஞ்சு பழத்தின் தோலில் தேநீர் செய்து அதை பருகலாம். ஆரஞ்சு பழத்தில் இருந்து தயாரிக்கப்படும் தேநீரில் சிறிது தேன் கலந்து பருகினால் உங்களுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.

Pexels

சாலட்கள், இனிப்புகளில் சேர்த்து சாப்பிடலாம். உலரவைக்கப்பட்ட ஆரஞ்சு பழத்தோல்கள் கேக்குகளில் சேர்க்கப்படுகிறது. இதில் துவையல் அரைத்தும் சாப்பிடலாம். பிஸ்கட்கள் தயாரிப்பதிலும் பயன்படுத்தலாம். இப்படி எண்ணற்ற வழிகளில் பயன்படுத்தக்கூடிய ஆரஞ்சு பழத்தின் தோல்களை இனி தூக்கி வீசாமல், அதையும் உட்கொண்டு உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தைப் பெறுங்கள்.

Pexels

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடும் மக்களை சந்தித்து தவெக தலைவர் விஜய் ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் இதோ!