‘பணம் கொட்டும்! வெற்றி கிட்டும்!’ மகரம், கும்பம் ராசிகளுக்கு சனி பகவானால் ஏற்படும் நன்மைகள்!
By Kathiravan V Jan 28, 2024
Hindustan Times Tamil
ஜாதகத்தில் மந்தன் என்று அழைக்கப்படும் சனி பகவான் கிள்ளி கொடுப்பவர் அல்ல; அள்ளி கொடுப்பவர் ஏனென்றால் கர்ணனை போல சனி பகவானும் சூரியனின் மகன்.
ஒரு நாளும் சனி பகவான் மகர ராசி,கும்ப ராசி அன்பர்களை கை விட்டதே இல்லை
மகரம் என்பது கடல் வீடு என அழைக்கப்படுகிறது. கடலின் அலைகள் எப்படி அடுத்தடுத்து வந்துகொண்டு இருக்கின்றனவோ, அது போலவே இவர்கள் மனதிலும் புதுப்புது எண்ணங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும்.
இவர்களுக்கு சனி பகவானும் தனாதிபதியாக வருவதால் நாணயம் தவறாதவர்களாக இருப்பார்கள். பணவரவுகள் தாமதமாக இருந்தாலும் இவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விடுவார்கள்.
அதேபோல் கும்ப ராசிக்காரர்கள் உழைப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்கள் கடினமான வேலைகளையும் எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள்.
‘பணம் கொட்டும்! வெற்றி கிட்டும்!’ மகரம், கும்பம் ராசிகளுக்கு சனி பகவானால் ஏற்படும் நன்மைகள்!
இருக்கும் இடத்திலேயே நிலையான தொழிலை அமைத்துக் கொள்ளும் அளவுக்கு திறமை கொண்ட கும்பராசிக்காரர்கள் மிக பெரிய தைரியசாலிகள். இவர்கள் அன்பான, சாந்தமான, தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
கும்ப ராசிக்காரர்கள் பேச்சுக்கு எந்த இடத்திலும் மதிப்பும், மரியாதையும் இருக்கும். உண்மையே பேச வேண்டும் என நினைப்பார்கள். கும்ப ராசிக்காரர்களுக்கு குடும்பத்தின் மீது அதிக பற்றுதல் இருக்கும். சுகத்தையும், சோகத்தையும் சமமாக பாவிப்பார்கள். இவர்கள் முன் கோபம் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
எலுமிச்சையை காபியுடன் கலந்து குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுமா?