தினமும் உங்கள் உணவு டயட்டில் ஏதேனும் பெர்ரி பழங்கள் சேர்ப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Aug 13, 2024

Hindustan Times
Tamil

சுவை மிக்க பெர்ரி பழங்கள் இனிப்பு தன்மை உங்களை திருப்திபடுத்துவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் தருகிறது

பெர்ரி பழங்களில் ஊட்சத்துகள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பி காணப்படுகிறது 

பெர்ரி பழங்களில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து வயிறு நிரம்பிய உணர்வை நீண்ட நேரம் தருவதுடன் உடல் எடையை நிர்வகிக்க உதவுகிறது

பெர்ரி பழங்களில் இருக்கும் ரசாயண சேர்மானங்கள் அதிக ரத்த அழுத்தம் ஏற்படுவதை கட்டுப்படுத்துகிறது

வாரந்தோறும் 2 முதல் மூன்று முறை பெர்ரி பழங்கள் சாப்பிடுவதால் பார்கின்சன் நோய் பாதிப்பின் ஆபத்து 23 சதவீதம் வரை குறைகிறது என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது

பிளேவனாய்ட்கள் அதிகம் இருப்பதுடன், ஆன்டிஆக்ஸிடன்ட்களும் நிரம்பியிருப்பதால் இதய நோய் ஆபத்துகளை குறைக்கிறது

இயற்கையான இனிப்பு தன்மை கொண்டிருக்கும் பெர்ரி பழங்கள் டயபிடிஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு சிறந்த சாய்ஸாக உள்ளது

இதில் இருக்கும் பிளேவனாய்ட்கள் மூளையின் செயல்பாட்டை சீராக்குகிறது. இதனால் நினைவாற்றல் பெருகி, புத்தி கூர்மையும் ஏற்படுகிறது

வரும் 2025ஆம் ஆண்டில் திடீர் கோடீஸ்வர யோகம் பெரும் 7 ராசிகள்! பணத்தை மூட்டை கட்ட ரெடியா?