Benefits of Green Beans : ஒரு கப் பச்சை பீன்ஸில் இத்தனை சத்துக்கள் உள்ளதா?
By Pandeeswari Gurusamy Feb 24, 2024
Hindustan Times Tamil
ஒரு கப் பீன்ஸில் 31 கலோரிகள் உள்ளன. 0 கிராம் கொழுப்புச்சத்து உள்ளது. 3.4 கிராம்கள் நார்ச்சத்துக்கள் உள்ளது. இதில் வைட்டமின்கள் கே 18 சதவீதம், சி 18 சதவீதம், வைட்டமின் பி9 9 சதவீதம், இரும்புச்சத்து 6 சதவீதம், பொட்டாசியச்சத்து 4 சதவீதம் உள்ளது.
pixa bay
பச்சை பீன்ஸில் அதிகளவில் நார்ச்சத்துக்கள் உள்ளது. இது உங்கள் உடலில் செரிமானம் நன்றாக நடைபெற உதவுகிறது. நார்ச்சத்துக்கள் மலத்தை இலகுவாக்குகிறது. ஆனால் நார்ச்சத்துக்கள் மலச்சிக்கலை தவிர்க்காது. இது உங்கள் குடலில் உள்ள நுண்ணுயிரிகளை சமமாக்குகிறது. இது உணவை செரிக்கவைத்து உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்குகிறது.
pixa bay
சர்க்கரை அதிகம் நிறைந்த உணவுகளை நாம் உட்கொள்ளும்போது, அது உங்கள் ரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்போதுதான் உங்களுக்கு மீண்டும் பசிக்கிறது. அப்போது பீன்ஸை எடுத்துக்கொண்டால் அது உங்கள் உங்களுக்கு சத்துக்களை கொடுக்கிறது.
Unsplash
நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் செரிமானத்தை மெதுவாக்க நீண்ட நேரம் உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வை கொடுக்கிறது. பச்சை பீன்ஸில், ஒரே அளவில் இயற்கையான சர்க்கரையும், நார்ச்சத்துக்களும் நிறைந்துள்ளது. இதனால் உங்கள் உடலில் ரத்தசர்க்கரை அளவு அதிகரிப்பது மற்றும் குறைவதால் உங்களுக்கு பசி உணர்வு ஏற்படது.
Unsplash
பச்சை பீன்ஸில் உள்ள வைட்டமின் கே சத்துக்கள், இது எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு நல்லது. கால்சியம், எலும்பு ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மற்ற ஊட்டச்சத்துக்களும் தேவை. உங்கள் உணவில் போதிய அளவில் வைட்டமின் கே எடுத்துக்கொள்ளாவிட்டால், அது உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை பாதிக்கும் என தெரிவித்துள்ளது. ஆனால் வைட்டமின் கே மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனையின்றி எடுத்துக்கொள்ளக்கூடாது.
Unsplash
உங்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்புத்திறன்தான் உங்களை தொற்றுகள் மற்றும் நோய்களில் இருந்து காக்கிறது. எனவே பச்சை பீன்ஸை சாப்பிடும்போது உங்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. அதில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. அது உங்கள் உடல் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கிறது. இது உங்களுக்கு அடிக்கடி சளி, இருமல் ஏற்படாமல் தடுத்து, உங்கள் நோய் எதிர்ப்புத்திறன் சிறப்பாக செயல்பட உதவுகிறது.
Unsplash
ரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு இதய நோய் ஏற்பட காரணமாகிறது. எனவே அதை தடுக்க அதிகம் பச்சை காய்கறிகளை உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் இதய நோய் ஆபத்தை தடுக்கலாம். பச்சை பீன்ஸில் உள்ள ஃபோலேட்கள் மற்றம் பெட்டாசியம், உங்கள் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
Unsplash
இந்த ஊட்டச்சத்துக்கள், உங்கள் உடலில் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும். உங்கள் உடலில் ரத்த அழுத்தத்தை முறையாக பராமரிக்க உதவும். அதனுடன் நீங்கள் சரிவிகித உணவு மற்றும் உடற்பயிற்சி போன்ற மற்ற ஆரோக்கிய செயல்பாடுகளிலும் ஈடுபடவேண்டும்.
Unsplash
பச்சை பீன்ஸில் உள்ள நார்ச்சத்துக்கள், உங்கள் உடலில் ஆரோக்கியமான கொழுப்பை சரியான அளவில் பராமரிக்க உதவும். இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள், உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும். இது உங்கள் குடலில் உள்ள கொழுப்பு ரத்தத்தை அடையும் முன்னர் அப்படியே உறிஞ்சி எடுத்துவிடும்.
Unsplash
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வேப்பிலை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்