வால்நட்டில் இருக்கும் நன்மைகள் அனைவருக்கும் தெரியும். தண்ணீரில் ஊற வைத்த வால்நட் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Aug 21, 2024

Hindustan Times
Tamil

கார்ப்போஹைட்ரேட், புரதம், ஆரோக்கிய கொழுப்புகள், நார்ச்சத்து, வைட்டமின்கள், கால்சியம், இருப்புசத்து, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்த சூப்பர் உணவாக வால்நட் உள்ளது

வால்நட் கொட்டையை தண்ணீரில் ஊற வைப்பதால் அதன் செரிமான திறன் அதிகரித்து, சைடிக் அமிலத்தின் அளவை குறைக்கிறது. அத்துடன் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது

இதய ஆரோக்கியம், ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடு என ஊற வைத்த வால்நட் சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன

உங்கள் டயட்டில் ஊற வைத்த வால்நட் சேர்ப்பதால் வீக்கத்தை குறைக்கிறது. இதில் இருக்கும் பாலிபினோலிக் சேர்மங்கள் அழற்சிகள் தொடர்பான அறிகுறி, நிலைமைகளை ஆற்றுப்படுத்துகிறது

அதிகப்படியான நார்ச்சத்து உள்ளடக்கம், குறைவான க்ளைசெமிக் குறியீடு ஊற வைத்த வால்நட்டில் இருப்பதால் ரத்த சர்க்கரை அளவை குறைப்பதன் மூலம் டைப் 2 டயபிடிஸ் பாதிப்பை நிர்வகிக்க உதவுகிறது

இதய நோய் ஆபத்தை ஊற வைத்த வால்நட் குறைக்கிறது. ஒற்றை நிறைவுற்ற, பல்நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது

மூளையின் ஆரோக்கியத்துக்கு ஆதரவு அளித்து அழற்சி மற்றும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கிறது. நினைவாற்றல், அறிவாற்றல் நெகிழ்வுதன்மையை மேம்படுத்துகிறது

கார்களி ஒளிந்து கொள்ளும் எலிகளை விரட்டுவதற்கான எளிய வழிகளை பார்க்கலாம்காரில் உள்ள எலிகளை விரட்ட எளிய வழி