வெங்காயத்தில் உண்டாகும் நன்மைகள்
By Marimuthu M
Jul 06, 2024
Hindustan Times
Tamil
வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. வெங்காயம் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது .
வெங்காயத்தை பச்சையாக கடித்து சாப்பிட்டால் வாய்ப்புண் மற்றும் கண்வலி குணமாகும். காரணம் வெங்காயத்தில் ரிபோபிளவின் என்னும் வைட்டமின் பி உள்ளது.
வெங்காயத்தில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் தியோ-சல்பினேட்டுகள் கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன
இதய நோய் உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகவும் உணவாகவும் வெங்காயம் இருக்கிறது.
வெங்காயத்தில் உள்ள செலினியம் வைட்டமின் ஈ -யின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது கண் பிரச்னையைத் தடுக்கிறது
வெங்காயம் பற்களில் பாக்டீரியாக்கள் தங்குவதை அழித்து பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ளும்.
வெங்காயம் ஆண்களின் விறைப்புப் பிரச்னையை சரி செய்ய உதவுகிறது. இது ஆண்களில் டெஸ்டோஸ்டிரோனின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது
காலையில் கறிவேப்பிலை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் இதோ!
image credit to unsplash
க்ளிக் செய்யவும்