வெங்காயத்தை உணவில் எடுத்துக்கொள்வதால் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள்
By Marimuthu M Dec 28, 2024
Hindustan Times Tamil
வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.
சின்ன வெங்காயம் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது
சின்ன வெங்காயத்தை பச்சையாக கடித்து சாப்பிட்டால் வாய்ப்புண் மற்றும் கண்வலி குணமாகும். காரணம் வெங்காயத்தில் அதிகளவு உள்ள ரிபோபிளவின் என்னும் வைட்டமின் பி காரணமாகத்தான்.
சின்ன வெங்காயத்தை வெறுமென தின்பதால் அடிக்கும் துர்நாற்றத்தைத் தவிர்க்க புதினா இலைகளை வாயில் இட்டு மெல்லலாம்.
இதய ரத்த நாளங்களில் ரத்தம் உறைவதைத் தடுக்க வெங்காயத்தை உணவில் எடுத்துக்கொள்வது நல்லது. வெங்காயத்தை வெறுமென எடுத்து மெல்வதால் உயர் ரத்த அழுத்தம் குறையும்.
சின்ன வெங்காயத்தில் இருக்கும் ஃபிளவனாய்டுகள் கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன.
சின்ன வெங்காயம் சாப்பிடுவது மூச்சுக்குழாயில் இலகுத்தன்மையை உண்டு செய்து ஆஸ்துமா நோயாளிகளுக்கு சுவாசிக்க காரணம் ஆகிறது.
Parenting Tips : தேர்வில் முதலிடம்; எப்போதும் சிறப்பிடம்; குழந்தைகளிடம் கூறவேண்டிய பாசிட்டிவ் விஷயங்கள் என்ன?