சனி ஜெயந்தி நாளில் என்னென்ன விஷயங்களை தானம் செய்ய வேண்டும். சனி ஜெயந்தி நாளில் தானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்
By Muthu Vinayagam Kosalairaman May 19, 2025
Hindustan Times Tamil
நீதி மற்றும் கர்மவினைக்கான கடவுளாக சனி பகவான் இருந்து வருகிறார். சனி ஜெயந்தி மிகவும் மங்களகரமான நாளாக கருதப்படுகிறது
இந்த ஆண்டில் சனி ஜெயந்தி மே 27ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சனி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன
இந்த நாளில் இல்லதாவர்களுக்கு தானம் கொடுப்பது சனி பகவானை மகிழ்விக்கும் செயலாகும். என்ன விஷயங்களை எல்லாம் தானமாக கொடுக்கலாம் என்பது பற்றி ஜோதிடத்தில் கூறும் விஷயங்களை பார்க்கலாம்
சனி ஜெயந்தி நாளில் கருப்பு எள்ளு தானமாக கொடுப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஏனென்றால் சனிக்கு மிகவும் பிடித்தமான பொருளாக கருப்பு எள்ளு உள்ளது
கருப்பு எள்ளு தானம் செய்வதால் வாழ்கையில் உள்ள தடைகள் அகலும் என கூறப்படுகிறது
எள்ளு எண்ணெய் சனி பகவானுக்கு படைப்பது மிகவும் மங்களகரமானாதக பார்க்கப்படுகிறது. இது தீமை விளைவிக்கும் கிரகங்களில் தாக்கத்தை குறைக்கிறது
இரும்பு பொருள்களை தானம் செய்வதால் எதிர்மறை தாக்கத்தின் பாதிப்புகள் குறையும் என கூறப்படுகிறது
கருப்பு உளுந்து தானம் செய்வதால் சனியின் ஆசீர்வாதத்தை பெறலாம். எனவே கருப்பு உளுந்தால் சமைந்த உணவுகளை தானமாக அளிக்கலாம்
கருப்பு துணிகள், குடை, காலணிகள் போன்றவற்றை தானமாக இந்த நாளில் கொடுப்பது மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது
குறிப்பு: இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஜோதிடர்கள்/ வாஸ்து நிபுணர்கள்/ பஞ்சாங்கங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. அவற்றை முழுமையாக நம்புவதற்கு முன், கண்டிப்பாக சம்பந்தப்பட்ட துறையில் நிபுணரிடம் ஆலோசனை பெறவும்